நாட்டின் 69-வது குடியரசு தினத்தையொட்டி அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் நரேந்திரமோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நாட்டின் 69வது குடியரசுத் தினம் நேற்று  நாடுமுழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு டெல்லி இந்தியாகேட் அருகில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முப்படை தளபதிகளுடன் மலர்வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினர்.

Tags:

Leave a Reply