அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு, பிரதமர் மோடி விடிய விடிய தூங்காமல் விழித்து இருந்து, அதிகாரிகளுடன் இணைந்து பணியில் ஈடுபட்டது தற்போது தெரிய வந்துள்ளது.

அவசர ஆலோசனை கூட்டம் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில், ஒரு அவசர ஆலோசனை கூட்டத்திற்கு பிரதமர் மோடி ஏற்பாடு செய்தார். இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், குஜராத் மற்றும் அதிகாரிகள், மத்திய அரசின் உள்துறை, ராணுவம், சுகாதாரம் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

தாக்குதலில் பாதிக்கப்பட்ட யாத்ரீகர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுவது, காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பது, இறந்தவர்களின் உடல்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு கொண்டு செல்வது, இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக நாட்டின் பிற பகுதிகளில் எந்த தாக்குதல் சம்பவமும் நடந்து கொள்ளாமல் பார்த்து கொள்வது உள்ளிட்ட விஷயங்களுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுத்தார் அதிகாலை 3 மணி வரை குஜராத் மாநிலத்தில், பதற்றத்துக்குரிய 30 இடங்களை அம்மாநில அதிகாரிகளும், பிரதமர் அலுவலக அதிகாரிகளும் அடையாளம் கண்டு அப்பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தினர். அதே போன்ற நடவடிக்கை மகாராஷ்டிரா, ம.பி., மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் எடுக்கப்பட்டது.

வட மாநிலங்களில், கன்வார் யாத்திரை என்ற பெயரில் சிவ பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். அவர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்தப்பட்டது. அதே போல், தலைநகர் டில்லியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

காஷ்மீரில் நடந்த மீட்பு பணிகளை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கண்காணிப்பில் நடந்தது. மோடி மற்றும் பிற அதிகாரிகள் அதிகாலை, 3 மணி வரை இப்பணிகள் குறித்த தகவல்களை பரிமாறிக் கொண்டனர் என தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply