பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமர்நாத் புனிதயாத்திரை தொடங்கியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அமர்நாத் யாத்திரையின் முதல் நாளன்று சுமார் 8 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசிக்க புறப்பட்டுசென்றனர்.
 
அமர்நாத் யாத்திரை 48 நாட்கள் நடைபெறும். ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் கடந்த சிலநாட்களாக தீவிரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. எனவே, பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது. ஜம்மு பகவதி நகரில் உள்ள அமர்நாத் முகாமில், ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளன. ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப் படுவது இதுவே முதல்முறை.
 
அமர்நாத் பனி லிங்க தரிசனத்துக்கு செல்லும் இருபாதைகளிலும் 20 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். தெற்கு காஷ்மீரில் பனிபடர்ந்த இமயமலையின் உச்சியில் அமர்நாத் குகைக் கோவில் உள்ளது. அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் ஜூலை மாதங்களில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்முவழியாக யாத்ரீகர்கள் புனிதப் பயணம் செய்வார்கள்.
 
தற்போது, இங்கு பனியால் ஆன லிங்கம் உருவாகி யுள்ளது. இதை தரிசிக்க நாடுமுழுவதும் இருந்து இந்து பக்தர்கள் புனிதயாத்திரை செல்கின்றனர். குகைக் கோயிலுக்கு பக்தர்கள் வாகனங்களில் செல்லமுடியாது. நடைப்பயணமாகதான் செல்ல முடியும். மேலும், பதிவு செய்தவர்கள் மட்டுமே இதில் பங்கேற்கமுடியும். எனவே, நாடு முழுவதும் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். 48 நாட்கள் நடைபெறும் இப்புனித யாத்திரை பலத்தபாதுகாப்புடன் தொடங்கியுள்ளது. முதல் குழுவில் 900 ஆண்கள், 225 பெண்கள், 13 சிறார்கள், 144 சாதுக்கள் இடம் பெற்றுள்ளனர். இக்குழு, 33 வாகனங்களில் சிஆர்பிஎப் வீரர்களின் பாதுகாப்புடன் பயணத்தை தொடங்கியது. அப்போது பக்தர்கள் ஹரஹர மஹாதேவா என்ற முழக்கமிட்டனர்.
 
பகல்ஹாம், பல்தல் முகாம்கள் வழியாகசென்று, கடல்மட்டத் திலிருந்து 3,888 மீட்டர் உயரத்திலுள்ள பனி லிங்கத்தை தரிசிப்பார்கள். தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்திருப்பதால், அமர்நாத் யாத்திரையை சுமூகமாக நடைபெற செய்வது பாதுகாப்பு படையினருக்கு சவாலாக இருக்கும். 12,500 மத்திய துணை ராணுவப்படையினரும், 8,000 மாநில போலீஸாரும் யாத்திரை பாதைகளில் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
 
பல லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் குவிய உள்ளதால் அவர்களுக்கு தேவையான அனைத்துவசதிகளும் இந்த மலையடி வாரத்தில் உள்ள ஆறு முகாம்களில் செய்யப்பட்டுள்ளது. உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பத்ற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்டநிர்வாகம் செய்துள்ளது. இங்குள்ள ஐந்துமுகாம்களின் அருகாமையில் தற்காலிக மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து முகாம்களிலும் தொலை பேசி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
 
ஆயிரக்கணக்கான கழிப்பறைகள், குளியல்அறைகள், பொது சமையல் கூடங்கள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. யாத்ரீகர் களின் சுமைகளை ஏற்றிச் செல்ல சுமார் 15 ஆயிரம் கழுதைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுசெய்ய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் 2 நாள் பயணமாக நேற்று காஷ்மீர் புறப்பட்டுசென்றார். அமர்நாத் குகை கோவிலுக்கு செல்லும் ராஜ்நாத் சிங், பனிலிங்கத்தை முதல் நபராக தரிசனம் செய்கிறார். காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என்.வோராவும் அவருடன் செல்கிறார்.

Leave a Reply