அமர்நாத் யாத்தி ரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று செல்கிறார்.

ஜம்முகாஷ்மீர் வழியாக செல்லும் அமர்நாத் யாத்திரை யானது வரும் 2-ம் தேதி தொடங்கவுள்ளது. இதையொட்டி, அங்கு செய்யப் பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ராஜ்நாத்சிங் நேரில் பார்வையிடுகிறார்.

பின்னர், மாநில முதல்வர் மெகபூபா முஃப்தி, காவல், ராணுவ உயரதி காரிகள் ஆகியோருடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்தக் கூட்டத்தின் போது, புல்வாமா மாவட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல், பயங்கர வாதிகளின் ஊடுருவல் சம்பவங்கள், மாநிலத்தில் தற்போது நிலவும் பாதுகாப்புச்சூழல் ஆகிய விவகாரங்கள் குறித்து ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply