காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள்சென்ற பஸ் மீது குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர்தாக்குதல் நடத்தினர். இதில் 7 பக்தர்கள் பலியாயினர்.காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி நினைவு தினத்தையொட்டி கடந்த 8-ம்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அமர்நாத் யாத்திரையும் நிறுத்தப்பட்டது.


இந்நிலையில் காஷ்மீரின் ஆனநாத்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்திரை சென்ற பஸ்மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அதில்பயணித்த 7 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கி சூடுசத்தம் கேட்டதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எதிர்தாக்குதல் நடத்தியதில் 3 போலீசார் காயமடைந்தனர். தகவலறிந்த பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்துவந்து துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.

Leave a Reply