பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

 தேசிய தலைவர் அமித்ஷா தனது 54 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். 

பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில்,

”பாஜக தேசியதலைவர் அமித் ஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அமித்ஷா அவர்களின் தலைமையின்கீல் , இந்தியா முழுவதும் நமது கட்சி பரந்து விரிந்து கொண்டு இருக்கிறது. அவரது கடின உழைப்பு கட்சியின் மிகப் பெரிய சொத்தாகும். அவர் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அருண் ஜெட்லி வாழ்த்து

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி டுவிட்டரில்,

”சக கட்சியினரும் மதிப்பிற்குரிய பாஜக தலைவருமான அமித்ஷா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் நீண்டகாலம் வாழ நான் வேண்டிக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ராஜ்நாத் சிங் வாழ்த்து

மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் டுவிட்டரில்,

”பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கடின உழைப்பு மற்றும் வியக்கத்தக்க ஒருங்கிணைப்பு திறமைக்கொண்ட அமித் ஷாவின் தலைமையில் பாஜக புதிய உச்சங்களை எட்டியி ருக்கிறது. அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைவாழ நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய சாணக்கியன் அமித் ஷா

மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத்நாயக் தனது வாழ்த்து செய்தியில்,

”இன்றைய சாணக்கி யனான அமித் ஷா அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தொண்டர்களுடனான இணைப்பு மற்றும் அவரது கொள்கைகளால் அவர் சிறந்துவிளங்குகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

இதைத் தவிர, பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சிதலைவர்கள், தொண்டர்கள் என பலரும் டுவிட்டர் மூலம் அமித் ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply