அமித்ஷாவைத்தான் நான் நம்பி யிருக்கிறேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அதிரடியாக தெரிவித்துள்ளார், அவரின்கருத்தால் ஸ்டாலின், வைகோ. கே.எஸ். அழகிரி உள்ளிட்ட கூட்டணி கட்சித்தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாஜக என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா வளவனுக்கு கசப்பு மருந்துதான்.  பாஜக கொண்டுவருகின்ற எந்ததிட்டமாக இருந்தாலும் அது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது என்று கண்ணைமூடிக் கொண்டு  விமர்சனம் செய்யத் தொடங்கிவிடுவார் திருமாவளவன், இதுமட்டுமின்றி திமுக, மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் கூட்டணிபோட்டு  பாஜகவையும், பாஜக தலைவர்களையும் வறுத்தெடுப்பதில் வல்லவர் திருமாவளவன். பாஜகவுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அப்படி ஒரு பரமவிரோதம் என்பதை உலகமே அறியும்.

அப்படிப்பட்ட திருமாவளவன், தான் நாடாளுமன்ற உறுப்பினரான பின்பு , இராஜிவ் கொலை வழக்கில் தண்டனைபெற்று சிறையில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளை அழைத்துச்சென்று அமித்ஷாவை சந்தித்து மனு கொடுத்து வந்துள்ளார் திருமாவளவன், இந்நிலையில் இதுதொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நல்ல முடிவு எடுப்பார் , அதற்காக அமித் ஷாவைத்தான் நான் நம்பியிருக்கிறேன் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஏழுதமிழர் விடுதலைக்கு விடுதலை சிறுத்தைகள் எந்த தியாகத்தையும் செய்யும் என திருமாவளவன் சொல்லிவந்த நிலையில் அவர் தற்போது அமித்ஷாவே தன் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்று திருமாவளவன் தெரிவித்துள்ள கருத்தால் கூட்டணி கட்சித்தலைவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்ப்பட்டுள்ளது.