பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துபேசினார். நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமை அலுவலகம் சென்ற அமித்ஷா, மோகன்பகவத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்தபிற தலைவர்களை சந்தித்து பேசினார். நண்பகல் 12.20 மணியளவில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் வந்த அமித்ஷா, மாலை 4.40 மணிக்கு புறப்பட்டுச் சென்றார். 

 

முன்னதாக, மத்திய அமைச்சர் உமா பாரதியும் இன்று ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் வருகைதந்து இருந்தார். அதேபோல், அண்மையில் புதிதாக தேர்வுசெய்யப்பட்ட விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் விஷ்னு சேதஷிவ் காக்ஜோவும் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் வருகைதந்து இருந்தார்.

Leave a Reply