குஜராத் மாநிலத்தில் இம்மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதையடுத்து விஜய் ரூபானி மீண்டும் முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக நிதின்பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு சாலை மற்றும் கட்டுமானம், சுகாதாரம், மருத்துவ கல்வி ஆகியதுறைகள் ஒதுக்கப்பட்டது.

 

அவருக்கு ஒதுக்கப்பட்ட துறை களினால் அவர் அதிருப்தி அடைந்துள்ளதால், நிதின் பட்டேல் துணைமுதல்வராக பொறுப்பேற்ற பின்னரும் ஒதுக்கப்பட்ட துறைகளின் பொறுப்பை இது வரை ஏற்காமல் இருந்தார்.

இந்நிலையில், இந்த பிரச்சனையில் பாஜக. தலைவர் அமித் ஷா தலையிட்டு நதின் பட்டேலுடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சு வார்த்தையில் மனம் மாறிய நிதின்பட்டேல் இன்று பொறுப்பேற்க ஒத்துக்கொண்டார்.

 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதின்பட்டேல் கூறுகையில், “அமித் ஷா இன்று காலை என்னை அழைத்து, மந்திரிசபையில் துணை முதல்வருன் மதிப்புக்கு ஏற்றதுறை வழங்கப்படும் என உறுதியளித்தார்.

அமித் ஷா கேட்டுக் கொண்டதையடுத்து இன்று பொறுப்பேற்க உள்ளேன். முதல்வர் விஜய்ருபானி இன்று கவர்னரை சந்தித்து எனக்கு ஒதுக்கப் பட்ட புதியதுறை குறித்த கடிதத்தை அளிப்பார்”, என கூறினார்.

 

Leave a Reply