பா.ஜனதா தலைவர் அமித்ஷா தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்துக்காக நாளை மறுநாள் (2-ந்தேதி) வருகிறார்.

பா.ஜனதா போட்டியிடும் தூத்துக்குடி, சிவகங்கை, கோவை ஆகிய 3 தொகுதிகளிலும் அவர் பிரசாரம்செய்கிறார்.

2-ந்தேதி காலை 11.30 மணிக்கு தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார். அங்கிருந்து எட்டயபுரம் ரோட்டில் தூத்துக்குடி பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசையை ஆதரித்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் சிவகங்கை செல்கிறார்.

நண்பகல் 12.30 மணிக்கு எச்.ராஜாவுக்கு ஆதரவாக நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கோவை புறப்பட்டுசெல்கிறார். கோவை சிவானந்தா கல்லூரி மைதானத்தில் மாலை 4.30 மணிக்கு கோவை பா.ஜனதா வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடைபெறும் பிரசார கூட்டத்தில் பேசுகிறார்.

இந்தபிரசார கூட்டங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொண்டு பேசுகிறார்.

தமிழகத்தில் தேர்தல்பிரசாரத்தை முடித்துக் கொண்டு அமித் ஷா கோவையில் இருந்து தனி விமானத்தில் பெங்களூர் புறப்பட்டு செல்கிறார்.

Leave a Reply