ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வரையறுக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிகளை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் பரப்பளவு அடிப்படை யிலும் வாக்காளர் கள் அடிப்படையில்
காஷ்மீர் ரீஜனை விட பெரியதாக இருக்கும் ஜம்மு ரீஜனுக்கு அதிக சட்டமன்ற தொகுதிகளும் லோக்சபா தொகுதிகளையும் அளிக்கப்பட
இருக்கிறது.

ஜம்மு ரீஜனின் பரப்பளவு 26,293 km2 இங்கு உள்ள சட்டமன்ற தொகுதிகள் 37 லோக்சபா தொகுதிகள் 2 மட்டுமே. ஆனால்15,948 km2
பரப்பளவு கொண்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு 46 சட்டமன்ற தொகுதிகள் 3 லோக்சபா தொகுதிகள் இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலேயே பெரிய பகுதி யான லடாக் ரீஜனில் ஒரு லோக்சபா தொகுதி யும் 4 சட்டமன்ற தொகுதிகளும் இருக்கின்றன.
லடாக் 59,196 km2 பரப்பளவை கொண்டு இருந்ததாலும் மக்கள் தொகை 4 லட்சத்தை தாண்டாது.

இதனால் ஜம்மு ரீஜனில் மட்டும்சட்டமன்ற மற்றும் லோக்சபா தொகுதிகளை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படை யில் இன்னும் 15 சட்டமன்ற தொகுதிகளும் இரண்டு
லோக்சபா தொகுதிகளும் ஜம்மு ரீஜனில் அதி கரிக்க ப்பட்ட வாய்ப்புகள் இருக்கிறது. இத னா ல் ஜம்மு ரீஜனில் மட்டும் 52 சட்டமன்ற தொகுதிக ளாக உயர்ந்து விடும்.

அதே மாதிரி காஷ்மீர் ரீஜனில் 15 சட்டமன்ற தொகுதிகளை  குறைக்கவும் ஏற்பாடுகள் நடை பெறுகிறது. அப்படி 15 சட்டமன்ற தொகுதிகள் காஷ்மீர் ரீஜனில் குறைக்கப் பட்டால் அங்குள்ள
சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 46 ல் இருந்து 31 ஆக குறைந்து விடும். இதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆட்சி யை தீர்மானி க்கும் உரிமையை காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி இழந்து விடும்.

அப்படி ஜம்மு ரீஜனில் சட்டமன்ற தொகுதிகள் அதிகரிக்கப்படும் பொழுது ஜம்மு காஷ்மீர் மாநில ஆட்சியை தீர்மானிக்கும் மெ ஜாரிட்டிக்கு தேவையான 44 சட்டமன்ற எம்எல்ஏ க்களை ஜம்மு லடாக் பகுதிகளில் இருந்து பெறுகிற கட்சி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியும்.

Comments are closed.