மீண்டும் பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப் பட உள்ள அமித் ஷாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி விருந்தளிக்க உள்ளார்.


டிசம்பர் மாதமே பாஜக தேசியத்தலைவர் தேர்தல் நடந்திருக்க வேண்டும்., ஆனால், மாநிலங்களின் கட்சிப் பொறுப்பாளர்கள் தேர்தல் நடைபெற்றுவந்ததால், இதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து நாளை மறுநாள் நடக்க உள்ள பாஜக தேசியதலைவர் தேர்தலில் அமித்ஷா ஒரு மனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி, அமித் ஷாவுக்கு நாளை விருந்தளிக்க உள்ளார். இந்த விருந்தின்போது அரசும், கட்சியும் எவ்வாறு ஒருங்கிணைந்து இயங்கவேண்டும் என்று ஆலோசிப்பார்கள் என்று தெரிய வருகிறது.

 

Leave a Reply