ஜூன் 21ம் தேதி, சர்வதேசயோகா தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. யோகாபயிற்சிகள் மூலம் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக, ஜூன் 21ம் தேதி, சர்வதேச யோகா தினமாக ஐ.நா., சபை அறிவித்தது.

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஐ.நா., சபை யோகாதினத்தை அறிவித்தது. அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதன்முதலாக யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வரும் 21-ம்தேதி சர்வதேச யோகாதினம் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் சீனா, அமெரிக்கா, வாஷிங்டன், சிலி மாகாணம் உள்ளிட்ட நகரங்களில் யோகாபயிற்சி செய்தனர். இதில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கலந்து கொண்டு யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.

Leave a Reply