அமெரிக்காவில் அமைதியான வழியில் அதிகார மாற்றம் நடைபெறவேண்டும் என அழைப்பு விடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் கலவரம், வன்முறை பற்றியசெய்திகள் வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர்தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். இவர் ஜனவரி 20-ஆம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.

ஜோபைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கானசான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றுவந்தது.

அப்போது நாடாளுமன்ற கட்டடத்திற்குவெளியே தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்தனர்.

டிரம்பின் ஆதரவாளர்கள் தொடர்ந்து அத்து மீறலில் ஈடுபட்டதால் தேசிய பாதுகாப்புபடையினர் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி டிரம்ப் ஆதரவாளர்களை கலைக்கமுயன்றனர்.

இந்நிலையில், அதிபர் டிரம்பின் ஆதரவாளர்களின் வன்முறை போராட்டத்திற்கு உலகதலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில், வாஷிங்டன் அமெரிக்க நாடாடளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற வன்முறைக்கு கண்டனம்தெரிவித்துள்ள மோடி, “நாடாளுமன்ற கலவரம் மற்றும் வன்முறை செய்திகளைக் கண்டு மன உளைச்சலுக்கு ஆளானேன்.   ஒழுங்கான மற்றும் அமைதியான அதிகாரமாற்றம் நடைபெற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளவர், வியாழக்கிழமையும் தொடரும், சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்கமுடியாது”.  என்று மோடி கூறியுள்ளார்.

ஜோ பைடன்: ‘ஜனநாயகம் சிதைந்து விட்டது என்பதை நடைபெற்றுவரும் சம்பவம் நினைவுபடுத்தி உள்ளது. இது வேதனையானது. பொது நன்மைக்காக ஜனநாயகத்தை பாதுகாக்க நல்ல எண்ணம் கொண்டமக்கள், தைரியமான தலைவர்கள் தேவை’ என்று பைடன் கூறியுள்ளார்.

Comments are closed.