பிரதமர் நரேந்திரமோடி தனது 5 நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒருஅங்கமாக நாளை (7-ந் தேதி) அமெரிக்காவுக்கு செல்கிறார். 2 நாட்கள் அங்கு இருக்கும் அவர், வாஷிங்டன் வெள்ளைமாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து இருதரப்பு உறவினை மேம்படுத்தும் வகையில் பேச்சு நடத்துகிறார்.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுதுறை செய்திதொடர்பாளர், செய்திநிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “பிரதமர் மோடியின் வருகையை நாங்கள் ஆவலுடன் எதிர்பார் க்கிறோம். ஓவல் அலுவலகத்தில் ஜனாதிபதி ஒபாமாவுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது. வெள்ளை மாளிகையில் விருந்தும் நடக்கிறது”

பிரதமர் மோடியின் வருகையின் போது, இந்தியா, அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு, ராஜ்ய ரீதியலான ஒத்துழைப்பை மேம்படுத்த கவனம்செலுத்தப்படும். பருவநிலை மாற்றம், தூய்மையான எரிசக்தி பற்றியும் பேசப்படும். இருநாடுகளின் நீடித்து நிலைத்து நிற்கத்தக்க பொருளாதார வளர்ச்சி குறித்தும் விவாதிக்க ப்படும் என குறிப்பிட்டார். 

Leave a Reply