உளவுபார்த்த குற்றச்சாட்டில் இந்திய கடற்படையில் பணியாற்றிய அதிகாரி குல்புஷன்ஜாதவ் பாகிஸ்தான் சி்றையில் தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த 25-ம்தேதி ஜாதவின் மனைவி மற்றும் தாயார் இஸ்லா மாபாத் சென்று சிறையில் உள்ள அவரை சந்தித்துபேசினர்.

அப்போது, ஜாதவ் மனைவி மற்றும் தாயாரின் தாலிகளை கழற்றியும், நெற்றியில் உள்ள குங்குமத்தை அழிக்கவும் அதிகாரிகள் வற்புறுத்தி யுள்ளனர். மேலும், ஜாதவின் மனைவி அணிந்திருந்த ஷுக்களில் உலோகப் பொருட்கள் இருந்ததாகவும், அதனால் அதனை திருப்பி தரவில்லை என்றும் கூறப்படுகிறது. எனினும், இதுஉண்மையா என்று தெரியவில்லை. இவ்விவகாரத்தில் அனைத்துகட்சிகளும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தானின் செயலுக்கு கண்டனம்தெரிவிக்கும் விதமாக டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதருக்கு ஒருஜோடி செருப்புகளை டெல்லி பாஜக செய்தி தொடர்பாளராக இருக்கும் தஜிந்தர் பாக்கா ஆர்டர் செய்துள்ளார். அமேசான் இணையதளத்தில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் முகவரியை குறிப்பிட்டு செருப்பு ஆர்டர்செய்துள்ள ரசீதை தனது ட்விட்டர் பக்கத்திலும் பாக்கா வெளியிட்டுள்ளார்.

மேலும், அனைவரும் செருப்பு ஆர்டர்செய்து பாகிஸ்தான் தூதருக்கு அனுப்பிவைக்க வேண்டும் எனவும் அவர் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply