மத்திய அமைச்சர்களின் இலாகாக்களின் விவரம் வெளியிடப் பட்டுள்ளது. அமித்ஷாவுக்கு உள்துறையும், ராஜ்நாத்திற்கு பாதுகாப்புத் துறையும், நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டில்லி, ஜனாதிபதி மாளிகையில், நேற்று ( மே 30) நடந்த கோலாகலமான விழாவில், மோடி, 68, பிரதமராக பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ராஜ்நாத் சிங், பா.ஜ., தலைவர் அமித் ஷா உட்பட, மொத்தம், 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இதில், 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும், ஒன்பது பேர் தனிப் பொறுப்புடன், இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். அமைச்சர்களின் இலாகா விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

 

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துறை விவரம் வருமாறு:

1. நரேந்திர மோடி (பிரதமர்) – அணுசக்தி, விண்வெளி உள்ளிட்ட துறைகள்

கேபினட் அமைச்சர்கள்:

2)ராஜ்நாத் சிங் – பாதுகாப்புத்துறை

3)அமித்ஷா – உள்துறை

4)நிதின்கட்கரி – போக்குவரத்து

5)சதானந்த கவுடா – ரசாயனம், உரம்

6)நிர்மலா சீதாராமன் – நிதித்துறை

7)ராம் விலாஸ் பாஸ்வான் – நுகர்வோர் நலன்

8)நரேந்திர சிங் தோமர் – விவசாயம்

9)ரவி சங்கர் பிரசாத் – சட்டம், தகவல் தொழில்நுட்பம்

10)ஹர்சிம்ரத் கவுர் பாதல்- உணவு பதப்படுத்துதல்

11)தாவர்த் சந்த் கெலாட் – சமூக நீதி

12)ஜெய்சங்கர்- வெளியுறவு

13)ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் – மனிதவள மேம்பாடு

14)அர்ஜூன் முண்டா – பழங்குடியினர் நலன்

15)ஸ்மிருதி ரானி – பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், ஜவுளி

16)டாக்டர். ஹர்ஷவர்தன் – சுகாதாரம்

17) பிரகாஷ் ஜவடேகர்- சுற்றுச்சூழல், வனம்

18)பியூஷ் கோயல் – ரயில்வே

19)தர்மேந்திர பிரதான் – பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, இரும்பு

20)முக்தார் அப்பாஸ் நக்வி – சிறுபான்மையினர் நலன்

21)பிரக்லத் ஜோஷி – நாடாளுமன்ற விவகாரம்

22)மகேந்திரநாத் பாண்டே – தொழில்முனைவார்

23)அரவிந்த் சாவந்த் – கனரக தொழில்

24)கிரிராஜ் சிங் – கால்நடை, பால், மீன்வளம்

25)கஜேந்திர சிங் ஷெகாவத் – நீர்வளத்துறை

இணை அமைச்சர்கள்: (தனிப்பொறுப்பு)

26)சந்தோஷ்குமார் கங்வார் – தொழிலாளர் நலன்

27)இந்திரஜித் சிங் – திட்டம், புள்ளியில்

28) ஸ்ரீபத் யசோ நாயக் – ஆயுர்வேத, யோகா, சித்தா

29)டாக்டர். ஜிதேந்திர சிங்- பென்ஷன், மக்கள் குறைதீர்ப்பு

30)கிரண் ரிஜிஜூ – இளைஞர் நலன், விளையாட்டு

31)பிரஹலாத் சிங் படேல் – சுற்றுலா

32)ராஜ்குமார் சிங் – புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

33)ஹர்திப் சிங் புரி – சிவில் விமானப்போக்குவரத்து

34)மன்சுக் மாண்டவியா – கப்பல் போக்குவரத்து

இணை அமைச்சர்கள் விவரம்:

35 ) ஃபகன்சிங் குலஸ்தே – இரும்பு

36) அஸ்வினி குமார் சவுபே – சுகாதாரம், குடும்பநலம்

37) அர்ஜுன் ராம் மேக்வால் – நாடாளுமன்ற விவகாரம்

38) வி.கே.சிங் – சாலை போக்குவரத்து

39) கிஷன் பால் – சமூகநீதி

40) தன்வேராவ் சாஹேப் தாதாராவ் -நுகர்வோர், உணவு

41) கிஷன் ரெட்டி – உள்துறை

42) பர்ஷோத்தம் ருபாலா – விவசாயம், விவசாயிகள் நலன்

43) ராம்தாஸ் அத்வாலே – சமூக நீதி

44) சாத்வி நிரஞ்சன் ஜோதி – கிராமப்புற மேம்பாடு

45) பாபுல் சுப்ரியோ – சுற்றுச்சூழல் வனம்

46) சஞ்சிவ் குமார் பல்யான் – கால்நடை, பால், மீன்வளம்

47) தோத்ரே சஞ்சே ஷாம்ராவ் – மனிதவள மேம்பாடு

48) அனுராக் சிங் தாக்குர் – கார்பரேட் விவகாரங்கள்

49) அங்காடி சுரேஷ் சன்னா பசப்பா – நிதி

50) நித்யானந்த் ராய் – உள்துறை

51) ரத்தன்லால் கட்டாரியா – நீர்வளம், சமூக நீதி

52) ஜி.முரளிதரன் – வெளியுறவு

53) ரேணுகா சிங் சருதா – பழங்குடியினர் நலன்

54) சோம் பிரகாஷ்- வர்த்தகம், தொழில்

55) ராமேஸ்வர் தெலி – உணவு பதப்படுத்துதல்

56) பிரதாப் சந்திர சாரங்கி – சிறு, குறு தொழில்கள்

57) கைலாஷ் சவுத்ரி – விவசாயம், விவசாயிகள் நலன்

58) தேபஸ்ரீ சவுத்ரி- பெண்கள் நலன், குழந்தைகள் மேம்பாடு

Comments are closed.