அமைதியை கடைபிடிக் குமாறு ஜம்ம்காஷ்மீர் மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை விடுத்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜா கிதீன் இயக்க தளபதி பர்கான்வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப் பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்ட முழு அடைப்பு வன்முறையாக வெடித்ததால் கடந்த சில தினங்களாக அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. 
 
இந்தசூழ்நிலையில், பிரதமர் மோடி காஷ்மீர் நிலவரம் குறித்து உயர்மட்டக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாரிக்கர், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் காஷ்மீர் வன்முறை  குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொண்டார். 
 
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியா ளர்களிடம் பேசிய பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:- “ ஜம்மு காஷ்மீர் மக்கள் அமைதி நிலையை கடைபிடிக்குமாறும் அப்போதுதான் அங்கு இயல்பு நிலை திரும்பும் என்று பிரதமர் மக்களை கேட்டுக் கொண்டார். அப்பாவி மக்கள் எந்தஇடையூறும் இழப்பையும் சந்திக்ககூடாது என்றும்  பிரதமர் தெரிவித்தார். அமர்நாத் யாத்திரை மீண்டும் துவங்கியுள்ளதற்கு திருப்தி தெரிவித்த பிரதமர், மாநில அரசுக்கு தேவையான எத்தகைய உதவியையும் வழங்கதயாராக இருப்பதாக உறுதி அளித்தார்” இவ்வாறு அவர் கூறினார். 
 

ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய சிலமணி நேரங்களில் காஷ்மீர் விவகாரம்தொடர்பாக உயர்மட்ட குழு கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டினார் என்பது கவனிக்கத்தக்கது. பிரதமர் வெளிநாட்டு பயணத்தில் இருந்தபோதும் ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்தும் அவ்வப்போது கேட்டுதெரிந்து கொண்டதாகவும் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

One response to “அமைதியை கடைபிடிக் குமாறு ஜம்ம்காஷ்மீர் மக்களுக்கு பிரதமர் கோரிக்கை”

  1. Admin says:

    அமைதியை கடைபிடிக்க வேண்டும்
    நரேந்திர மோடி

Leave a Reply