டாக்டர் அம்பேத்கர் பெயரில் சர்வதேச ஆராய்ச்சிமையத்தை டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி இன்று தொடங்கி வைத்தார்.

டெல்லியில் அம்பேத்கர் சர்வதேசமையம் என்ற பெயரில் ஆய்வுகளை ஊக்குவிக்கும் நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இதில் விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய்கோயல், சமூக நீதித் துறை அமைச்சர் தவார்சந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவை கட்டமைத்ததில் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. வரலாற்றில் அவரதுஇடத்தை அழிப்பதற்கு பலமுயற்சிகளை நடந்துள்ளன. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.

மேலும், மத்திய அரசு அம்பேத்கர் வாழ்கையுடன் தொடர் புடைய இடங்களை மக்கள் அதிகம்வந்து செல்லும் இடங்களாக மாற்றிவருகிறது என்றும் பிரதமர் பெருமிதம்தெரிவித்தார்.

இன்று முதல் இயங்கும் அம்பேத்கர் சர்வதேசமையத்தில் கருத்தரங்கம் மற்றும் மாநாடுகளை நடத்துவதற்கான அரங்குகளும் டிஜிட்டல் வசதிகளுடன் கூடிய மாபெரும் நூலகமும் இருப்பது குறிப்பிடத் தக்கது. .

Leave a Reply