பாரத ரத்தன அம்பேத்கர் அவர்களுக்கு பாஜக சிறப்பும் கௌரவமும் செய்வதை எதிர்க்கும் சிறு மதியாளர்கள், சாதிய கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் தமிழிசை கண்டனம்.

தேசிய தலைவரை வெறும் சாதி வலைக்குள் அடைக்க வேண்டாம். அம்பேத்கர் ஒரு சிறந்த சட்ட நிபுணர் மட்டுமின்றி சிறந்த பொருளாதார மற்றும் தத்துவ மாமேதை, இந்திய அரசியல் அமைப்பின் சிற்பி, இந்திய அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத மாபெரும் வரலாற்று சின்னம் அம்பேத்கர், இன்னும் பல சிறப்பு மிக்க ஒரு தேசிய தலைவரை தமிழகத்தில் சாதியம் வளர்த்து, சாதி தீ  பரப்பும் சாதி கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் அவரை வெறும் சாதி வலைக்குள் அடைக்க வேண்டாம் அவர் ஒரு தேசிய தலைவர்.

ஏழை குடும்பத்தில் பிறந்த நான் இந்திய நாட்டு பிரதமராக வந்ததே அம்பேத்கரின் சிந்தனைகளின் வெற்றி என்கிறார் நம் பிரதமர் மோடி. அவர் கண்ட சமத்துவ கனவுகளை இந்திய முழுமைக்கும் இன்று நனவாக்கி வருபவர் மோடி, சாதிய பாகுபாடுகளை ஒழிப்பதே நம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்கிறார் என் தலைவர் அமித் ஷா அவர்கள்.

அம்பேத்கரின் பெண் உரிமை சித்தாந்தம் அங்கங்கே சில சமூக விரோதிகளால் கேள்வி ஆகும் நேரங்களில் எல்லாம் அதனை நான் இரும்பு கரம் கொண்டு அடக்கி ஒடுக்குவேன் என்பது மோடியின் குரல்.

உச்ச நீதி மன்றம் ஒரு தலை பட்சமாக சாதிய வன் கொடுமை சட்டத்தை நீர்த்துப்போக செய்ய கூடாது என்று மத்திய மோடி அரசு குரல் கொடுத்து உள்ளது. அம்பேத்கர் பெயர் என்றும் நிலைக்கும் பல திட்டங்களை மோடி அரசு நிறைவேற்றி வருகிறது, டெல்லியில் 100 கோடியில் அம்பேத்கர் நினைவகம் திறப்பு. லண்டன் மாநகரில் அவர் படித்த இடத்தில பல கோடி செலவில் நினைவகம் திறப்பு, மஹாராஷ்டிராவில் 12 ஏக்கர் பரப்பில் 766 கோடி செலவில் வரவிருக்கும் நினைவு மண்டபம்.

சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை, தங்கும் இட வசதிகள், வட்டியில்லா வங்கி  கடன், படித்த உடன் தொழில் தொடங்க மானிய உதவி என இன்னும் பல மேம்பட்டு திட்டங்களை மோடி அரசு செயலாக்கி வருகிறது.

தமிழகத்தை சேர்ந்த சகோதரர் வழக்கறிஞர் திரு முருகன் அவர்களை தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் துணை தலைவராக, ஒரு மத்திய இணை அமைச்சருக்கு இணையான நாற்காலியில் அமர்த்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருப்பது மோடி அரசு ஆனால் பாஜக வை தமிழகத்தில் ஏதோ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விரோதி போல் சித்தரித்து அரசியல் ஆதாயம் பெற வேண்டாம். தமிழக சாதி கட்சிகளையும், அமைப்புகளையும் கேட்டுக் கொள்கிறேன்.

நேற்றைய தினம் பாஜக தேசிய தலைமையின் அறிவுறுத்தலின் படி பல இடங்களில் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து பாஜக உணர்வுபூர்வமாகவும், உள்ளார்த்தமாகவும் அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செய்து பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது, இதை பொறுத்துக்கொள்ள முடியாத விசிக கட்சியினர் பல இடங்களில் வன்முறை செயல்களில் ஈடுபட்டதை வன்மையாக கண்டிக்கிறேன், பாஜக அவரை ஒரு தேசிய தலைவராக பெருமை படுத்துகிறது, விசிக போன்ற கட்சிய்கள் ஒரு சாதிய எதிராக வன்முறைகளில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக பாஜக தலைவர்.

Leave a Reply