அயோத்தியில் தீபாவளி கொண்டாடியது என் தனிப்பட்ட நம்பிக்கை. எனது நம்பிக்கை யை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் தீபாவளி கொண்டாடினார். இதை காங்கிரஸ் கட்சி குறை கூறியது. இதற்கு பதிலளித்து ஆதித்யநாத் நேற்று அளித்த பேட்டியில் கூறிய தாவது:

அயோத்தியில் தீபாவளி கொண் டாடியது என் தனிப்பட்ட நம்பிக்கை. இதில் எதிர்க் கட்சிகள் எப்படி குறுக்கிட முடியும்? என் தனிப்பட்ட நம்பிக் கையை யாரும் கேள்வி கேட்க முடியாது. அதற்கு யாருக்கும் உரிமையும் இல்லை. மேலும், தீபாவளியை முன்னிட்டு அயோத்திக்கு ஏராளமான மக்கள் வழிபட வருவார்கள். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடு களை பார்வை யிடவும் வந்தேன்.

உத்தரபிரதேச முதல்வர் என்ற முறையில் மாநிலத்தின் எல்லா இடங்களிலும் வளர்ச்சியை ஏற்படுத்த உறுதியோடு இருக்கிறேன். ஒரு முதல்வராக இது எனது கடமை. மாநிலத்தில் அமைதியும் வளமும் பாதுகாப்பும் நலமும் ஏற்பட பிரார்த்தனை செய்வதற் காகவும் அயோத்தி வந்தேன்.

இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.முன்னதாக,ராமஜென்ம பூமியில் அவர் வழிபாடு செய்தார். ஹனுமன் கோயிலுக்கும் சென்று வழிபட்டார்.

Leave a Reply