குஜராத் சட்ட சபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தன்டுகாநகர் உள்பட நேற்று பல்வேறு இடங்களில் பிரசாரம்செய்தார்.

அப்போது அவர், பாராளுமன்ற தேர்தலுடன் அயோத்திவழக்கை தொடர்புபடுத்தி காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் எம்.பி. சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டதற்கு கடும்கண்டனம் தெரிவித்தார்.

இதுபற்றி மோடி பேசும்போது, “சுப்ரீம்கோர்ட்டில் கபில்சிபல் தனது கட்சிக்காரருக்காக வாதிடுவதற்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது. ஆனால் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகே ராமர்கோவில் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்… எதற்காக அயோத்தி பிரச்சினையுடன், பாராளுமன்ற தேர்தலை இணைத்து பேசவேண்டும்? இது முறையான செயல்தானா?… காங்கிரசார் கொஞ்சமாவது நாட்டைப்பற்றியும் சிந்திக்க வேண்டும்” என்று ஆவேசமாக கூறினார்.

“அதேபோல் உத்தரபிரேதேச தேர்தலுக்காக (உள்ளாட்சி தேர்தல்) முத்தலாக் விவகாரத்தில் நான்மவுனமாக இருந்ததாக கூறுகிறார்கள். எல்லாவற்றையும் தேர்தலுடன் தொடர்புபடுத்தி பார்க்கக் கூடாது. இது பெண்களின் உரிமைகள் தொடர்பானது. எனவே முதலில் மனிதநேயத்துக்குத் தான் முன்னுரிமை கொடுப்பேன். தேர்தல் எல்லாம் அதன்பிறகு தான்” என்று குறிப்பிட்டார். 

Leave a Reply