சார் நான் திரும்ப திரும்ப சொல்கிறேன் இவர் விவசாயியே இல்லை, தமிழ்நாட்டுல ரெண்டு திராவிட கட்சிகளும் மணலை சுரண்டி சுரண்டி நதிகளை நாசமாக்கி கொண்டிருக்கின்றன அதை எதிர்த்து அல்லவா இந்த அய்யாக்கண்ணு போராட்டம் நடத்தி இருக்க வேண்டும் ? அப்படி நடத்தி இருந்தால் நானும் போய் ஒரு விவசாயி என்கிற பெயரில் கலந்துக் கொண்டிருப்பேன். ஆனால் இவர் யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் ? மத்தவனை எல்லாம் பாம்பை கடிக்க வைத்து, எலியை கவ்வ வைத்து இவர் வேடிக்கை பார்க்கிறார். மற்றவர்களை அம்மனமாக திரிய வைத்து, இவர் முழு உடையோடு இருக்கிறார். என்ன சூழ்ச்சி இது ? இதில் என்ன கொடுமை என்றால் என்றைக்கு தினகரன் ஆர் கெ நகரில் "நாமினேஷன்" தாக்கல் செய்கிறாரோ அன்று இவர் போராட்டத்தை தொடங்குகிறார், தற்போது தினகரன் அதிமுகவில் இருந்து விலகுகிறேன் என்று சொன்னவுடன் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுகிறேன் என்கிறார். இவரின் பின்புலம் என்ன ? யாருடைய கைகூலி இவர் ?

நெடுவாசலுக்கு நான் சென்ற போது, அந்த கிராம மக்கள் என்னை வரவேற்று பேசினார்கள். அவர்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் பிரிவினைவாதிகள் தான் இதை வைத்துக் கொண்டு மோடிக்கு எதிராக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். கோயம்புத்தூரில் இருந்து எஸ் டி பி ஐ ஆட்களை லாரிகளில் கொண்டு சென்று போராட்டம் செய்கிறார்கள். அது என்ன அமைப்பு ? தீவிரவாத குழுக்களுக்கு அங்கு என்ன வேலை ?

Leave a Reply