முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் அரக்கோணம் தொகுதியின் வேட்பாளருமான ஜகத்ரட்சகன் நிறுவனம் சுமார் 12,000 கோடி ரூபாயை, இலங்கையின் மிகப்பெரிய வெளிநாடு தொழில் முதலீடு செய்துள்ளது.

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவால் சீனாவின் உதவியோடு உருவாக்கப்பட்டது. இந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு தொல்லை தர விரும்பினால், இந்த துறைமுகம் சீனாவுக்கு மிகப்பெரிய பலம்.

இந்த துறைமுகத்திற்கு அருகே சுமார் 25,000 கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இலங்கை முடிவு செய்துள்ளது, இதற்கான பணிகள் அடுத்த வாரம் துவங்கவுள்ளது. இரண்டு நாட்கள் முன்பு இலங்கை அதிகாரபூர்வமாக இதை அறிவித்தபோது தான் ஜகத்ராட்சகன் நிறுவனத்தின் முதலீடு குறித்து தெரிய வந்தது.

சுமார் 12,000 கோடி ரூபாயை Silver Park International நிறுவனம் முதலீடு செய்கிறது. இந்த Silver Park International நிறுவனம் Accord Life Spec Pvt Ltd நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இரண்டு நிறுவனங்களிலும் ஜகத்ராட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் இயக்குனர்கள். இரண்டுமே சென்னையில் உள்ள ஒரே முகவரியில் தான் இயங்கி வருகிறது.

2014ல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது தாக்கல் செய்த பிராமண பத்திரத்திலும், Accord Life Spec Pvt Ltd நிறுவனம் குறித்து ஜெகத்ரட்சகன் குறிப்பிட்டுள்ளார். அந்த பிரமாண பத்திரத்தின் படி அவர் மற்றும் மனைவியின் சொத்துக்கள் மதிப்பு 78 கோடி ரூபாய்.

இப்போது நமக்கு எழும் கேள்விகள்

1. ஐந்து ஆண்டுகள் முன்பு 78 கோடி ரூபாய் தான் சொத்து இருந்த நிலையில், தற்போது 12,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய பணம் எங்கிருந்து வந்தது?

2. 12,000 கோடி முதலீடு செய்யுமளவிற்கு முடியுமென்றால், இவரது ஒட்டு மொத்த சொத்து மதிப்பு என்ன?

3. கல்வி நிறுவனம் மற்றும் மதுபான ஆலை நடத்தி வருகிறார் இவர். இவ்வளவு சொத்து வந்திருக்கிறது என்றால், கல்வி நிலையத்தில் வாங்கும் நன்கொடை என்ன?

4. இது இவரது பணமா அல்லது வேறு யாரோ ஒருவரின் பணமா? வேறு ஒருவரின் பணம் என்றால், யார் அந்த நபர்?

5. மோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கிறார் என்று கூறும் திமுக, இலங்கையின் மிகப்பெரிய தொழில் முதலீட்டை செய்துள்ள ஜெகத்ரட்சகனுக்கு ஏன் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார்?

6. இந்த குற்றச்சாட்டு எழுந்து 2 நாட்கள் ஆகியும், ஜகத்ராட்சகனோ, ஸ்டாலினோ தொடர் மவுனம் சாதிப்பது ஏன்?

Leave a Reply