காங்., தலைவர், ராகுலின் விமர்சனங்கள் குறித்து, பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா கூறியதாவது:காங்., கட்சியின் வம்சாவளி அரசியலை பாதுகாக்கவே, 'அரசியலமைப்பு சட்டத்தை காப்போம்' என்ற பெயரில், பிரசார திட்டத்தை, ராகுல் துவக்கி உள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக, ராகுலுக்கு உள்ள வெறுப் புணர்வு, இந்தியாவுக்கு எதிரானதாக திரும்பி உள்ளது.

அரசியலமைப்பு சட்டத்தை நாசம் செய்யும் ஒரேகட்சி, காங்., மட்டுமே. மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், தேர்தல் கமிஷன், ராணுவம், உச்ச நீதிமன்றம் என, பல்வேறு அமைப்புகள் மீது, பல்வேறு சமயங்களில், காங்., தாக்குதலை தொடுத்துள்ளது; இவை அனைத்தின்மீதும் நம்பிக்கை வைக்காத, காங், தற்போது, அவை ஆபத்தில் உள்ளதாக கூறுகிறது. 1975ல், நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்ததும், காங்கிரசே. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply