மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: பிரதமர் அலுவலகத்திற்கு பலபள்ளி மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். நாட்டின் பிரச்னைகள் மற்றும் தேவைகள்குறித்து அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

இதேநாளில் தான், கடந்த 1949ல் இந்திய அரசியல்சாசனம் ஏற்று கொள்ளப் பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டம் ஜனநாயகத்தின் உயிர் நாடியாக உள்ளது. அரசியலமைப்பு குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்களின் கடினஉழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை அனைவரும் நினைவுகூற வேண்டும். சர்தார் வல்லபாய் படேலும், இந்தகுழுவில் இடம் பெற்றிருந்தார். அரசியலமைப்பு சட்டம், ஏழைகள், பலவீன மானவர்களை காக்கிறது.

கடந்த 9 வருடங்களுக்கு முன் மும்பையில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இன்றைய நாளில் தான் நடந்தது. உயிரிழந்த நமது ராணுவ வீரர்களை நாடு நினைவு கூர்கிறது. அவர்களின் தியாகத்தை நாடு மறக்காது. பயங்கரவாதம் சர்வதேச அளவில் சவால் விடும் வகையில் உள்ளது. பயங்கரவாததத்தால் பல்லாயிரகணக்கான உயிர்கள் பறிபோயுள்ளன. முன்னர் இந்தியா கூறிய போது உலக நாடுகள் கவனிக்கவில்லை. தற்போது பயங்கரவாதம் சர்வதேச பிரச்னையாக உள்ளது. ஒவவாரு ஜனநாயக நாடும், இந்த அச்சுறுத்லை எதிர்கொள்கிறது. மனித நேயத்திற்கு பயங்கரவாதம் சவாலாக அச்சுறுத்தலாகவும் உள்ளது. அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்று சேர வேண்டும். நாம் பயங்கரவாதத்தை வெற்றி பெற விட மாட்டோம்.

 

நமது நதிகளும், கடலும், பொருளாதார ரீதியாக முக்கியத் துவம் வாய்ந்தவை. இவை உலகநாடுகளுக்கு நுழைவு வாயிலாக உள்ளன. நமதுநாட்டுக்கு கடலுடன் உடைக்க முடியாத உறவுஉள்ளது. பெரும்பாலான கடற்படையில் பெண்களை தாமதமாக அனுமதித்தன என்பதை சிலர் அறிந்து வைத்துள்ளனர். ஆனால், 8 அல்லது 9 நூறாண்டுகளுக்கு முன்பு சோழர்களின் கடற்படை, உலகின் சிறந்தகடற்படையாக செயல்பட்டது. அதில், அதிகமான பெண்கள் முக்கிய பங்காற்றினர். கடற்படை பற்றி பேசும்போது சத்ரபதி சிவாஜியை மறக்கமுடியாது. மராத்தா கடற்படையில், பெரிய மற்றும் சிறியகப்பல்கள் இருந்தன. அவரின் கடற்படை எதிரிகளை தாக்குவதுடன், அவர்களின் தாக்குதலை முறியடித்தது.

சுதந்திரத்திற்கு பின் இந்திய கடற்படை தனதுபெருமையை பலமுறை நிலைநாட்டியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போர் உள்ளிட்ட பலநேரங்களில் அதன் திறன் வெளிப்பட்டுள்ளது. போர் காலத்தில் மட்டுமல்லாமல், இந்தயகடற்படை மனிதநேய பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. வங்கதேசம், மியான்மரில் புயல்தாக்கிய போது, நமது கடற்படை கப்பல்கள் மீட்புபணியில் ஈடுபட்டன. புயலில் சிக்கிய நிறைய மீனவர்கள் மீட்டு, வங்க தேசத்திடம் ஒப்படைத்தன. இலங்கையில் பெருவெள்ளம் ஏற்பட்ட போதும், இந்திய கடற்படை கப்பல் மீட்புபணியில் ஈடுபட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply