தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் இன்று கோவைவந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

ஆர்.கே. நகர் தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டபோதும் பணம்பட்டுவாடாவை தடுக்கமுடியவில்லை. மக்கள் பணத்தை ஊழல்மூலம் சுருட்டி இந்த பணத்தை தேர்தல் மூலம் மக்களுக்கு அளித்து வருகின்றனர்.

வாக்காளர்கள் நேர்மையாக இருந்தால்தான் தேர்தல் நேர்மையாக நடைபெறும். ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிடப் பட்டது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதில் அனைவரும் சேர்ந்து நாடகம் ஆடுகிறார்கள். ஆர்கே. நகர் தேர்தலுக்கும், ஜெயலலிதா கிகிச்சைவீடியோ வெளியானதற்கும் சம்பந்தம் இல்லை என கூற முடியாது.

கெயில், ஓஎன்ஜிசி., நியூட்ரோன் போன்ற திட்டங்களில் மக்களுக்கு நன்மைகுறித்து விளக்குவோம். மக்கள் ஒத்துழைப்பு இல்லாத எந்ததிட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம்.

மக்களுக்கு நலன்பயக்கும் நல்ல திட்டங்களை செயல்படுத்த முயற்சிசெய்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

அவரிடம் கெயில் திட்டத்தில் பாரதிய ஜனதா அரசு மக்களைகுழப்புவதாக 7 மாவட்ட விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளார்களே? என கேள்வி எழுப்பட்டது.

அதற்கு பதிலளித்த தமிழிசை சவுந்தர ராஜன், விவசாயிகள் நலன் பாதுகாக்கப் படும் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பாராளு மன்றத்தில் கூறி உள்ளாரே என பதில் அளித்தார்.

2ஜி தீர்ப்பினை நீதிமன்றதீர்ப்பாக மட்டுமே பார்க்கமுடியும். தனிப்பட்ட முறையில் இது பற்றி சொல்ல ஒன்றுமில்லை.  நீதிபதிகளின் கருத்துக்கு மாற்றுகருத்து சொல்ல முடியாது.

தீர்ப்புகுறித்து முழுவதும் படித்தபின்பே தீர்ப்பு குறித்து முழுமையாக பேசமுடியும். இந்த தீர்ப்பை மட்டும் வைத்து முழுமையாக கருத்துசொல்ல முடியாது. அரசியலில் இருந்து லஞ்சம், ஊழல் ஒழியவேண்டும் என்பதே எங்களின் நிலைபாடு. மக்களே ஊழல் செய்தவர்களை புறம் தள்ளுவார்கள்.

Tags:

Leave a Reply