தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-தமிழகத்தில் நேர்மறையான அரசியலை பா.ஜ.க தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

மிகமூத்த அரசியல் தலைவரான கருணாநிதி மறைவால் அரசியல்வெற்றிடத்தை வைத்து அரசியல் ஆதாயத்தைதேட வேண்டிய நிலையில் பா.ஜனதா இல்லை.

அரசியலையும் கடந்து முது பெரும் தலைவர் என்ற நிலையில் அவருக்கு உரிய மரியாதையை மத்திய அரசு செய்தது. இது எங்கள் அரசியல்பண்பாடு.

எங்களை பொறுத்தவரை தமிழக அரசியலில் மாற்றம் வரவேண்டும். அதற்காக கட்சியை குக்கிராமங்கள்வரை பலப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தி இருக்கிறோம்.வருகிற தேர்தலில் நிச்சயம் மாற்றத்தை உருவாக்குவோம். தமிழகத்தில் தொடர்ந்துவரும் ஊழல், நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள்.

மத்தியில் ஆளும் மோடி அரசுமீது எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை. எனவே மக்களின் ஆதரவு பா.ஜனதா பக்கம் திரும்பும் என நம்பிக்கை உள்ளது. கேரளாவில் ஏற்பட்டுள்ள மழைசேத பாதிப்புகளுக்கு உதவுவதற்கு ஒரு குழுவை அமைத்துள்ளோம். இந்த குழுவினர் கேரள மக்களுக்கு உதவுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

Leave a Reply