இயற்கை பாதிப்புக்கு தமிழகத்தின் மீது குற்றச் சாட்டைக் கூறி, அரசியல் ஆதாயம்தேடும் கேரள அரசின் செயல்பாடு அநாகரி கமானது என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செüந்தர ராஜன் தெரிவித்தார்.  கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:


 கேரளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு தான் காரணம் என அந்தமாநில அரசு குற்றஞ் சாட்டுவது வேதனை அளிக்கிறது. இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவது அநாகரிகமானது. நன்கொடையாக வரும் வெளிநாட்டு நிதியை நேரடியாக பயன் படுத்த முடியாது என்கிற நடைமுறை புதிதல்ல. இதற்கு  முன்பு சுனாமி, உத்தரகண்ட் வெள்ளப்பாதிப்பு போன்றவை ஏற்பட்ட போது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும் இதே நடைமுறையைத்தான் கடைப்பிடித்தார்.


கேரள வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அங்குள்ள அரசு பாரபட்சம் செய்வதாக பாஜக மூத்த தலைவர் ராஜ கோபால் கூறியுள்ளார். கல்லூரி, பள்ளி மாணவர்கள் வாஜ்பாயின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தியது எங்களுக்கு பெருமையாக உள்ளது. அரசியலை தாண்டி நடுநிலைத் தலைவராகத் திகழ்ந்தவர் வாஜ்பாய். மேலும், அஸ்தியை நாங்கள் தமிழகம்முழுவதும் கொண்டுசெல்வதை, அரசியல் செய்வதாக எதிர்க் கட்சியினர் கூறுவதில் உண்மையில்லை. இது பாஜகவின் நடைமுறை என்றார்.

Leave a Reply