சமீபத்திய இந்திய தேர்தல் முடிவுகளின் பேரில் ஒரு அலசல்….. நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையின் சாராம்சம்…..

…….இந்திய மக்களுக்கு பொருளாதார அறிவோ பணவீக்கம் என்றால் என்னவென்றோ அது 2. 4% அல்லது 3. 4% என எந்த வித்தியாசமும் தெரியாது. அதை அவர்கள் புரிந்து கொள்வதுமில்லை. மேலும் அவர்கள் இலவசமாக அரசு பொருட்களை கொடுப்பதாலும் மேலும் மானியங்கள் அளிப்பதாலும் இந்திய அரசு வெளிநாட்டிலிருந்து கடன் வாங்கவேண்டிய நிலை இருப்பதையும் மேலும் மேலும் இலவசங்கள் கொடுக்கும்பொழுது மேலும் மேலும் கடன் வாங்க வேண்டி இருப்பதையும் அறிவதில்லை. மேலும் இதை ஒருநாள் இந்திய அரசு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற புரிதலும் அவர்களுக்கு இல்லை.

……..இந்திய மக்களுக்கு ஜிடிபி எனப்படும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 3. 8 % லிருந்து 7. 5 சதவீதமாக கடந்த நான்கு வருடங்களில் உயர்ந்ததையும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளை விட இது அதிக வளர்ச்சி என்பதையும் அறிந்து கொள்வதும் இல்லை. புரிந்து கொள்வதும் இல்லை.

……..இந்திய மக்களைப் பொருத்தவரை எதைப்பற்றியும் எப்பொழுதும் ஏதாவது புகார் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்புகார் ஆனது சமயங்களில் துவரம்பருப்பைப் பற்றியோ அல்லது வெங்காயத்தைப் பற்றியோ இருக்கும். அது இல்லாவிட்டால் பெட்ரோல், டீசல், கேஸ் என வேறு ஏதாவது பற்றியோ இருக்கும். இந்திய மக்களுக்கு விவசாயப் பொருட்கள் விலை குறைவாக கிடைக்க வேண்டும் ஆனால் விவசாயிகளுக்கு நல்ல விலையும் நல்ல லாபமும் கிடைக்க வேண்டும்.

…..இந்திய மக்களைத் தங்களுடைய பழைய பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள அரசு சொல்லக்கூடாது. ஆனால் இந்திய அரசு எல்லாவற்றையும் மாற்றி இருக்க வேண்டும், அதுவும் இப்பொழுதே.

………இந்திய மக்களைப் பொறுத்தவரை நீண்ட கால பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் அப்பிரச்சினைகள் இன்றே இப்பொழுதே தீர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

……இந்திய மக்களுக்கு நினைவாற்றல் மிக குறைவு. மேலும் அவர்களின் பார்வையும் மிக மிக குறுகியது. அவர்கள் பழையதை மறந்து மன்னித்து விடுவார்கள்.

………..பொதுவாகவே இந்திய மக்கள் ஜாதி வாரியாக ஓட்டளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஜாதி வாரி ஓட்டளிப்பு என்பது இந்திய அரசியலுக்கு ஒரு மிகப்பெரிய சாபம். இது இந்திய இளைஞர்களைப் பிரித்தும் மற்றும் அவர்களை முன்னேற விடாமலும் தடுக்கிறது.

……நமது அண்டை நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும் நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மூலம் நம்முடைய சமுதாயத்தில் ஜாதி வாரியான மற்றும் மத வாரியான பிரிவினைகளை உருவாக்கி குளிர் காய்கின்றன. இந்திய சந்தை திறந்த சந்தையாகவும் அவர்களுக்கு இருக்க வேண்டும்… அதில் அவர்களுடைய ஆதிக்கமும் இருக்க வேண்டும். இதுதான் சைனாவின் குறிக்கோள்.

……..இந்திய பாதுகாப்பு படைகள் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது மிக வலிமையாக இருக்கின்றன. பாகிஸ்தானும், அவர்களுக்கு அருகில் இருக்கும் வளைகுடா நாடுகளும் நம்மீது ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அதனாலேயே அவர்கள் பல்லாயிரக்கணக்கான கோடிகளை இந்தியாவுடைய சமூக அடிப்படை கோட்பாடுகளை தகர்க்கவும் நம் தேச பாதுகாப்பில் ஓட்டைகளை ஏற்படுத்தவும் செலவழிக்கிறார்கள். இன்றைய தேதியில் இதை எதிர்த்துப் போராடும் வலிமை மோடியின் தலைமையின் கீழ் மட்டுமே உண்டு. ஆனால் இந்திய மக்களுக்கு இது புரிவதில்லை.

……. திரு மோடி அவர்கள், தான் தொடர்ந்து நான்கரை ஆண்டுகளாக செய்து வந்த நீண்ட கால பிரச்சினைகளை தீர்க்கும் விஷயங்களை மேலும் ஐந்து மாதங்களுக்கு செய்தால் அவர் 2019 தேர்தலில் படுதோல்வி அடைவார். இறந்துபோன சிப்பாயினால் தேசத்திற்கு எந்த நன்மையும் இல்லை. ஆகவே மோடி அவர்கள் மீண்டும் ஐந்து வருடங்கள் இந்திய தேசத்திற்கு பிரதமராக வர வேண்டும். அதற்காக அவர் தேசியவாதி எனப்படும் நிலையிலிருந்து அரசியல்வாதி என்ற நிலைக்கு ஒரு 5 மாதங்களாவது இறங்கி வர வேண்டும். மக்களுக்கு குறைந்த விலையில் பெட்ரோல் டீசல் தேவை என்றால் அதை கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி தேவை என்றால் அதையும் கொடுத்துத்தான் ஆக வேண்டும்

.‌…ஏனெனில் இந்திய மக்களுக்கு அவருடைய கொள்கையான ‘எல்லோருடனும் எல்லோருக்காகவும்’ என்பது புரிவதில்லை.

……..நாங்கள் இந்திய பிரதமரான திரு மோடிக்கு கொடுக்கும் அறிவுரை என்னவென்றால், நீங்கள் ஸ்டேட்ஸ்மேன் என்ற நிலையிலிருந்து அரசியல்வாதி என்ற நிலைக்கு இறங்கி வாருங்கள். 2019 தேர்தலை வென்று மீண்டும் statesman என்ற நிலைக்கு மாறுங்கள். ஏனெனில் அரசியல்வாதி மோடியினால் இந்திய தேசம் முன்னேறாது. ஸ்டேட்ஸ்மேன் மோடிதான் இத்தேசத்தை முன்னேற்ற முடியும்…

From an article in New York times

Leave a Reply