முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி ஆகஸ்ட் 24-ம்தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணைஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன், அவரது உடலுக்கு நேரில்சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதற்கிடையே, மத்திய முன்னாள் நிதிமந்திரி மறைந்த அருண் ஜெட்லிக்கு பீகாரில் சிலை அமைக்கப்படும் என முதல் மந்திரி நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.இந்நிலையில், மறைந்த முன்னாள் நிதிமந்திரி அருண் ஜெட்லிக்கு இரங்கல் கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.இந்தகூட்டத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட முக்கியதலைவர்கள் பங்கேற்று அருண் ஜெட்லி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்

Comments are closed.