பிரதமர் வாஜ்பாய் தலைமை யிலான முன்னாள் மத்திய அரசில் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரியாக பதவிவகித்தவர் அருண் ஷோரி.

பிரபல பொருளாதாரத் துறை நிபுணர், பத்திரிகை ஆசிரியர், சிறந்த அரசியல் விமர்சகர், தேர்ந்த கட்டுரையாளர் என பன்முகத் திறமை கொண்ட அருண்ஷோரி(74)  உடல்நலக் குறைவால் புனே நகரில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி புனேநகரில் உள்ள ரூபி கிளினிக் மருத்துவ மனையில் மத்திய முன்னாள் மந்திரி அருண் ஷோரியை இன்று மாலை சந்தித்து நலம்விசாரித்தார்.

அருண் ஷோரி நலமுடன்வாழ நாங்கள் பிராத்திக்கிறோம் என்ற குறிப்புடன் அருண் ஷோரியை சந்தித்துப்பேசும் புகைப்படங்களை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட் டுள்ளார்.

Comments are closed.