மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் போலீஸ்வாகனம் மீது வெடி குண்டுகளை வீசி நக்சலைட்டுகள் இன்று நடத்திய தாக்குதலில் 16 போலீசார் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இன்று  கட்சிரோலியில் எல்லைபகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அங்கு மதியம் அரசு பணிகளை செய்து கொண்டு இருந்த 4 புல்டோசர்கள் நக்சல்களால் கொளுத்தப்பட்டது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு அளிப்பதற்காக 16 பேர்கொண்ட நக்சல் எதிர்ப்பு போலீஸ்படை சென்றது. அவர்கள் செல்லும் வழியில் நக்சல் இந்ததாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். அவர்கள் செல்லும் வழியில், சாலையில் நக்சல்கள் மூலம் பலஇடங்களில் கன்னி வெடிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்துள்ளது.

சரியாக போலீசார் சென்ற ஜீப் இதில் ஏறிவெடித்து சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே 11 வரை பலியாகி இருக்கிறார்கள். அதே இடத்தில் பதுங்கிஇருந்த நக்சல் மீதம் இருந்த கமாண்டோ அதிகாரிகள் மீது தாக்குதல்நடத்தினர். இந்த தாக்குதலில் 5 கமாண்டோ படையினர் வரை பலியானார்கள்.

 

இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘நக்சல் தாக்குதலில் மரணமடைந்த துணிச்சலான கமாண்டோபடை விரர்களுக்கு வீர வணக்கம். நம் வீரர்களின் தியாகம் ஒரு போதும் மறக்கப்படாது’ என கூறியுள்ளார்.

 

மத்தியில் நரேந்திரா மோடி தலைமையிலான பாஜக அரசு நக்சலைட்டுகளை ஒழிப்பதற்காக எடுத்த கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக நக்சல்களின் ஆதிக்கம் 137 மாவட்டங்களிலிருந்து ஏழு மாவட்டங்களாக குறைந்துள்ளது இது தீவிரவாதிகள் மீதான மோடி அரசின் கடுமையான நடவடிக்கைக்கு கிடைத்த பலனாகும்.

கடந்த 2009- 2014 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் நக்சலைட்டுகள் மேற்கொண்ட தாக்குதல் 6953, இறந்த பாதுகாப்பு படையினர் 862, கொல்லப்பட்ட நக்சலைட்டுகள் 475 மட்டுமே.
அதே கடந்த 2014- 2019 ஆம் ஆண்டுகால பாஜக ஆட்சியில் நக்சலைட்டுகள் மேற்கொண்ட தாக்குதல் 4614, இறந்த பாதுகாப்பு படையினர் 263, கொல்லப்பட்ட நக்சலைட்டுகள் 715 ஆகும். எனவே இந்தியாவில் நக்சலைட்டுகள் அழிவின் எல்லையில் இருக்கின்றனர் என்பதே உண்மை.

Tags:

Leave a Reply