மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லி, முன்பு டெல்லி கிரிக்கெட்வாரிய தலைவராக இருந்தபோது, எர்ன்ஸ்ஷா கொட்லா மைதானம் கட்டியதில் ஊழல் முறைகேடு நடந்ததாக, டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் குமார் விஷ் வாஸ், அசுதோஷ் உள்பட 6 பேர் குற்றம்சாட்டினர்.
 
அவர்கள் 6 பேர்மீதும் டெல்லி முதன்மை மெட்ரோ பாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், நிதி மந்திரி அருண்ஜெட்லி அவதூறு வழக்குதொடர்ந்தார். மாஜிஸ்திரேட்டு சுமித்தாஸ் முன்னிலையில் இந்தவழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் கடந்த ஜனவரி மாதம் 5-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.விசாரணை முடிந்த நிலையில் இந்தவழக்கு மீதான தீர்ப்பு வருகிற 9-ந் தேதி (மார்ச்) வழங்கப்படும் என்று மாஜிஸ்திரேட்டு சுமித்தாஸ் அறிவித்தார்.

Leave a Reply