ஸ்வயம்சேவகர். சமீபத்தில் மந்திரியாக இருந்து காலமானார். பெரிதாக யாருக்கும் தெரியாது இந்த பெரிய மனிதரை பற்றி. இவரை பற்றி கோவிந்த் சொவளே என்பவர் ஜூரிச்சிலிருந்து ஒரு தகவல் பகிர்ந்துள்ளார். இது அவரது சொந்த அனுபவம்.

இந்த கட்டுரையின் பெயர் “அவர் ஸ்வயம்சேவக்கப்பா…” இது 2006 இல் நடந்த சம்பவம். ஆனால் துல்லியமாக அனைத்தும் நினைவில் உள்ளது. பயோ எரிபொருள் தயாரிக்கும் நிறுவனங்களோடு நான் சமபந்தப்பட்டிருந்தேன். இதற்கு பொங்கமியா என்ற விதைகள் மிக அதிகமாக தேவை என்பதை அறிந்தோம். திடீரென்று எனக்கு ஒரு யோசனை. ஆதிதிராவிட பழங்குடியின மக்களிடம் இந்த பணியை தந்தால் அவர்களுக்கும் நிறைய பணம் கிடைக்கும். அவர்களை வைத்து செய்தால் குறைந்த செலவில், உழைப்பில் ஏக்கருக்கு 24,000 வரை கிடைக்கும் என்று.

இதற்காக 5000 குடும்பங்களை தேர்ந்தெடுத்து, 5000 ஏக்கர் நிலம் வேண்டுமென்று கணக்கிடப்பட்டது. மாநில அரசின் உதவியை நாட முயன்று அணில் தவே மூலம் பேசுவது என்று எண்ணினோம். அவர் அப்போது பாஜகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். மத்திய பிரதேசத்தில் பெரும் வெற்றியை பெற்றிருந்தது. அவரை சிந்தனையாளர்கள் கூட்டத்தில் சந்தித்தேன். ஆழ்ந்த அறிவு, சொல்லின் செல்வராக இருந்தது எல்லாம் என்னை பெரிதும் ஈர்த்தது.

அவரிடம் விளக்கினேன். 'போபால் வா. என்ன செய்ய முடிகிறது என்று பார்ப்போம்' என்றார். இதுவரை நான் அரசாங்கத்தை அணுகியதே இல்லை. அரசாங்கம் என்றாலே, எப்படி அணுகுவார்களோ என்ற கவலையும் இருந்தது.

எப்படியோ, போபால் சென்று தவே அவர்களை சந்தித்தேன். வரவேற்றார். சில முக்கிய கூட்டங்களை, சந்திப்புகளை முடித்துக்கொண்டு நேரம் ஒதுக்கினார். 'கூட வாருங்களேன்' என்றார்.
தொற்றிக்கொண்டேன். அடுத்த நான்கு மணி நேரத்தில் அவர் சந்தித்த பிரச்சனைகள், அதை அணுகிய விதம் எல்லாம் அசரவைத்தது. எந்த அரசு பதவியிலும் இல்லாதவர் இப்படி அசரவைக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டு போனேன். நீர் மேலாண்மை, MP க்கள் பணத்தை சிறப்பாக செலவிடும் முறைகள், நின்று போன ஆலையை ஊழியர்களிடம் ஒப்படைத்து அவர்களையே நடத்த திட்டமிட்ட விதம்; என்று அனைத்தும் அறிந்தவராக இருந்தார்.

ஒரு வழியாக மதியம் முதலமைச்சர் இடத்தை அடைந்தோம். திட்ட விவரங்களை சொன்னேன். காரியதரிசி, என்னை கேள்விக்கணைகளால் துளைக்க துவங்கினார்.

கா: “ஆக, உங்கள் நிறுவனத்துக்கு 5000-ஏக்கர் நிலம் ஒதுக்கப்படவேண்டும்??”
நான்: இல்லை. நேரடியாக பழங்குடியினர் குடும்பத்துக்கு."
கா: "விதைகளுக்கு, செடிகளுக்கு சலுகை வேண்டும்?”
நா: “இல்லை. நேரடியாக அந்த குடும்பங்களுக்கு”
கா: “அப்படியென்றால் அந்த செடிகளை நீங்கள் அவர்களுக்கு விற்ப்பீர்களா?"
நா: “இல்லை. நாங்கள் வெறுமனே வழிகாட்டுவோம்..”
கா: “அப்போது அந்த செடிகளிலிருந்து வரும் விதைகளை நீங்கள் சொல்லும் விலைக்கு உங்களுக்கு விற்க வேண்டும். இல்லையா?”
நா: "இல்லை. சந்தை விலைக்கு தந்தால் போதும். அடிப்படை லாப விலையை நாங்கள் நிர்ணயம் செய்கிறோம்.”
கா: “உங்களிடம்தான் விற்க வேண்டுமா?"
நா: "இல்லை. யார்க்கு வேண்டுமானாலும் விற்கலாம். நாங்கள் கேரண்டி தருகிறோம் அவ்வளவே."
கடைசியில், வெறுத்து போய், “உங்களுக்கு என்ன லாபம் இதனால்? எதற்கு இதை செய்கிறீர்கள்?"

என்னால் இப்போதுதான் உணர முடிந்தது. "இதனால் உங்களுக்கு லாபமென்ன? எங்களிடம் எல்லோரும் எதையாவது வேண்டுகிறார்கள்.
உங்களுக்கு என்ன வேண்டும்" என்ற கேள்வி முகத்தில் இருந்தது. எனக்கு எந்த லாபமும் இல்லை. எனக்கு எதுவும் வேண்டாம் என்று எப்படி சொல்லி விளக்குவது என்று சிந்தித்துக்கொண்டிருந்தபோது, அணில் தவே அவர்கள் குறுக்கிட்டு, " அவர் ஸ்வயம்சேவக்க்கப்பா.." என்றார்.

அவ்வளவுதான். அதை சொன்ன விதம், என் பேச்சை நிறுத்தியது. ஒரு சங்க ஸ்வயம்சேவகருக்கு எதையும் எதிர்பாராமல் செய்வது என்பது இயல்பான விஷயம். இதில் பெரிதாக சிந்திக்க எதுவும் இல்லை என்பதை 'அவர் ஸ்வயம்சேவக்க்கப்பா" என்று இரண்டு வார்த்தைகளில் முடித்துவிட்டார்.

நான் சிறு வயது முதலே ஸ்வயம்சேவக். ஆனால், அந்த வார்த்தைகள் என் பொறுப்பை, என் மீதிருந்த நம்பிக்கையை, என் கடமையை அதிகப்படுத்தியது, கனமாக்கியது.

திரும்ப வரும்போது, அணில் தவே அவர்கள், “கோவிந்த்ஜி, காரியாலயம் போகலாம். உங்களுக்கு சுவையான போஹா உணவு ஏற்பாடு செய்கிறேன்" என்றார்.

கட்சி அலுவலகத்துக்கு செல்லும் வழியில் மீண்டும், தொலைபேசி அழைப்புகள், மந்திரிகள் அழைப்புகள், ஆலோசனைகள் எல்லாம் அவரை யாரென்று காட்டியது. எப்பேர்ப்பட்ட ஆளுமையும், அறிவும் நிறைந்தவர் என்று உணர்ந்தேன்.

அவருடைய அறைக்கு சென்றோம். அவருக்கென்று ஒரு தனி அறை இருக்கும் என்று நினைத்தேன். பார்த்தால் 12 x 12 அடி அறை. ஒரு கட்டில், ஒரு மேஜை, ஒரு நாற்காலி, மூன்று அலமாரிகள் முழுவதும் புத்தகங்கள். எனக்கு 5000 ஏக்கர் வழங்க ஏற்பாடு செய்த இவர், இங்கு மத்திய பிரதேசம் போன்ற ஒரு பெரும் மாநிலத்தை கிட்டத்தட்ட ஆள்பவர் போல நடந்துகொண்டிருந்த ஒரு மனிதர் இத்தனை சிறிய அறையில், மிக குறைந்த உடமைகளோடு வாழ்கிறார் என்று உணர்ந்தேன். ஆனால், எனக்கு அதிர்ச்சியாக இல்லை. காரணம் நான் அவரை அறிந்திருந்தேன். "அவர் ஸ்வயம்சேவகரப்பா…."

தன் ரேடியோவின் லைசென்ஸ் காலாவதியானதால் சட்டத்தை மீறி அதை கேட்க மாட்டேன் என்று இருந்த தீனதயாள் உபாத்யாயா போன்ற மகான்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அதற்கு பின்னர் இது போன்ற ஆட்களை தயாரிப்பதை இறைவன் நிறுத்திக் கொண்டு விட்டார் என்று எண்ணினேன். இந்த சந்திப்பு சங்கத்தில் மறைந்து, ஒளிந்து இருக்க கூடிய இது போன்ற பலரை பற்றி எனக்கு நினை படுத்தியது. இவர்களை பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நிஜத்தில் சந்திக்கும்போது அந்த சந்திப்பு, அந்த உரசல், அந்த நிஜம் சுட்டது. "ஸ்வயம்சேவக்கப்பா" என்பது வாழ்க்கையின் லட்சியமாகிறது அவர்களுக்கு. அந்த எளிமைத்தனம் இருந்ததாலேயே தன் நினைவாக எதுவும் செய்துவிட கூடாது என்று தெளிவாக இருந்தார். "மரங்களை நடுங்கள். ஆனால், என் பெயரால் எதுவும் செய்து விடாதீர்கள்" என்று கூறினார்.

இன்று ஒரு அரசியல்வாதி இப்படி சொல்வாரென்று எதிர்பார்க்க முடியுமா? இவரால் முடிந்தது.

காரணம், "அணில் மாதவ் தவே… ஸ்வயம்சேவக்க்கப்பா".

Leave a Reply