என்னுடன் சிலவருடங்கள் முன்பாக ஒரு BPOவில் பணியாற்றிய #மணிப்பூர் மற்றும் #அசாம் மாநிலங்களை சேர்ந்த 2 நண்பர்களை தொடர்புகொண்டு வடகிழக்கு மாநிலங்களில் தற்போது நிலவிவரும் வன்முறை, அமைதியின்மை, கலவரம் தொடர்பாக பேசினேன்.

அவர்கள் இருவருமே சொன்னது இதுதான் —

“#BJP ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக குடியுரிமை திருத்தசட்டம் (citizenship amendment) வரும் என்பது பொதுவாகவே எதிர்பார்த்த ஒன்றுதான். ஏனென்றால், பாஜகவின் தேர்தல் வாக்குறுதியிலேயே (Election manifesto) இது ஒருமுக்கியமான விஷயம்.

பங்களாதேசத்திலிருந்து தப்பி வந்த ஹிந்துவுக்கு ஆதரவாகவும் பங்களாதேசத்திலிருந்து ஊடுருவிய முஸ்லிமுக்கு எதிராகவும் கிட்டத் தட்ட 30-40 வருடங்களாக BJP அதிகாரப்பூர்வ நிலைபாடு எடுத்தது அஸ்ஸாமியர் எல்லோரும் அறிந்தவிஷயம்.

#CAB யை அமல் படுத்துவதுவதன் மூலம் #பாஜக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறது. விஷயம் இவ்வளவுதான். இதை ஊதி பெரிதாக்குவதன் மூலம் அஸ்ஸாமில் 30%க்கும் மேலான முஸ்லிம்களின் ஓட்டுக்காகவே காங்கிரஸ் மற்றும் #AIUDF தலைவர் பத்ருதீன் அஜ்மல் திட்டம்போட்டு அரசுக்கு எதிராக கலவரத்தை பின்னே இருந்து நடத்துகிறது. திரிணாமுல் காங்கிரசின் பிரதான ஓட்டு வங்கியோ பங்களாதேஷி முஸ்லிம்கள். அதற்காகவே மம்தாபானர்ஜியும் தன்பங்குக்கு முஸ்லிம் குழுக்களை ஏவி விடுகிறார்” என்றார்.

சரி அதுபோகட்டும், அப்பாவி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என கேட்டேன். “குழப்பதில்தான் இருக்கிறார்கள்… எனினும், வரும் நாட்களில் சரியாகிவிடும். யாரும் காங்கிரஸ் கட்சியையோ முஸ்லிம் அமைப்புகளையோ நம்ப தயாராக இல்லை. இருந்தாலும், ஒவ்வொரு ஹிந்துவுக்கும் ‘ஹிந்துஉணர்வு’ என்பதும் ‘ஹிந்து-ஒற்றுமை’ என்பதும் ரொம்ப அவசியம்” என்று முடித்தார்.

அன்புடன்
வெங்கடேஷ்

Comments are closed.