தமிழகத்தில் தி.மு. க.,வை நேரடியாக எதிர்க்கும்துணிச்சல் உள்ள ஒரேகட்சி பா.ஜ., தான் என மாநில தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்ட பா.ஜ., சார்பில், முப்பெரும் விழா பொதுக் கூட்டம், வானுார் அடுத்த திருச்சிற்றம்பலத்தில் நடந்தது. இதில், பா.ஜ., மாநிலதலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேசியதாவது :தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் சொல்கிறார். தமிழ் மீது இருக்கும்காதலால், சமஸ்கிருதத்தை பார்த்தால் கோபம் வருகிறது என்று. உங்கள் குடும்பத்தினர் நடத்தும் நிறுவனங்கள் மீது ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் போது உங்களது தமிழ் காதல் எங்கே காணாமல் போனது என்று தெரியவில்லை.

தமிழகத்தில் தி.மு. க.,வை நேரடியாக எதிர்க்கும்துணிச்சல் ஒருகட்சிக்கு இருக்கும் என்றால், அது பாரதிய ஜனதா கட்சி தான் என உறுதியாக கூறமுடியும்.அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்த்து விட்டு, நாம் ஆட்சியில் அமர்ந்துவிடலாம் என தி.மு.க., வினர் பிதற்றி கொண்டிருக்கின்றனர். முன்னாள் முதல்வர் ஜெ., மரணம் மற்றும், நீட்தேர்வை வைத்து அரசியல் நடத்துகின்றனர். நீட்தேர்வால், ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.பா.ஜ., புறவாசல் வழியாக ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. நேரடியாக ஆட்சியை பிடிக்கும் திறமையும், வலிமையும் எங்களுக்கு இருக்கிறது.இவ்வாறு தமிழிசை சவுந்தர்ராஜன் பேசினார்.

Leave a Reply