பிரபல நடிகையும், அரசியல் வாதியுமான ஜெயப்பிரதா பாஜகவில் இணைந்ததையடுத்து, உத்திர பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என அதிகாரப் பூர்வமாக அறிவிக்க பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் உச்ச \நடிகைகளில் ஒருவரான ஜெயப்பிரதா, கடந்த 1994-ம் ஆண்டு தெலுங்குதேசம் கட்சியில் இணைந்து அரசியல் வாழ்வை தொடங்கினார்! ஆனால் சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்துமோதலால் அங்கிருந்து விலகி சமாஜ்வாதியில் இணைந்தார். கடந்த 2004 மற்றும் 2009-ம் ஆண்டில் உத்தர பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆனார்.

ஆனால் அங்கேயும் பிரச்சனை ஆரம்பமானது. அதனால் 2010-ம் ஆண்டில் சமாஜ் வாதியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு முக்கியகாரணம் அக்கட்சியின் மூத்த தலைவர் ஆசம்கான்தான்!

இதையடுத்து, அமர்சிங்குடன் இணைந்து ராஷ்டிரிய லோக்மன்ச் என்ற கட்சியை தொடங்கினார். இந்தநிலையில், ஜெயபிரதா பாஜகவில் இணைய போவதாக செய்திகள் வலம்வர ஆரம்பித்தன. அதன்படி இன்று பாஜகவில் அதிகாரப்பூர்வமாக தன்னை இணைத்து கொண்டார்.

 

இதைப்பற்றி ஜெயப்பிரதா கூறுகையில், “சினிமா அல்லது அரசியல் எதுவாக இருந்தாலும் சரி, நான் எப்போதுமே என்சிறந்த முயற்சியைக் கொடுத்துள்ளேன். நான் டி.டி.பியிலும் பின்னர் சமாஜ்வாடி கட்சியிலும் பணிபுரிந்து வந்தேன், இப்போது நரேந்திரமோடியின் தலைவர்களுடன் நான் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது, இந்தகட்சிக்கும் நாட்டிற்கும் என்னை நானே சமர்ப்பிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

வரும் மக்களவைத் தேர்தலில் ராம்பூர்தொகுதியில் பாஜக வேட்பாளராக அவர் போட்டியிடுவார் என்று சொல்லப் பட்டது. ஏனெனில் இந்த தொகுதியில் தான் ஆசம் கான் போட்டியிட உள்ளார். அதனால் ஆசம் கானை எதிர்கொள்ள சரியான நபர் ஜெயப்பிரதா தான் என பாஜக முடிவுசெய்தது.

அதன்படியே தற்போது, ராம்பூர்தொகுதி பாஜக வேட்பாளராக ஜெயப்பிரதா அறிவிக்கப்பட்டுள்ளார். யாரால் சமாஜ்வாதி கட்சியிலிருந்து வெளியேற்றபட்டாரோ அவரை எதிர்த்து போட்டியிட ஜெயப்பிரதாவும் தயாராகிவிட்டதாக கருதப்படுகிறது. சமீபத்தில்கூட, “என் உயிருக்கு ஆபத்து, ஆசிட்வீசி ஆசம்கான் என்னை கொல்ல பார்க்கிறார்” என்று பரபரப்பு குற்றச் சாட்டை அளித்திருந்தார் ஜெயப்பிரதா என்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply