ஆசியபசிபிக் பொருளாதார கூட்டமைப்பில் இந்தியாவை இணைக்க அதிபர் ஒபாமா அரசு உதவவேண்டும் என கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்) மசோதா அறிமுகப் படுத்தப்பட்டது.

 ஆசியபசிபிக் கூட்டமைப்பில் சீனா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் உள்பட 21 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த கூட்டமைப்பில் இணைவதற்காக இந்தியா விண்ணப்பித்துள்ளது.
 இந்நிலையில், இந்தக்கூட்டமைப்பில் இந்தியாவை இணைக்க ஒபாமா அரசு உதவவேண்டும் என்று கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மசோதாவை அறிமுகப்படுத்தினர்.

இந்த மசோதாவை அறிமுகப் படுத்தியவர்களில் ஒருவரும், ஆசியபசிபிக் விவகாரங்களுக்கான துணை குழுவின் தலைவருமான மேட்சல்மன் கூறியதாவது: இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்து வதற்காகவும், அந்நாட்டில் அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்காகவும் பல்வேறு சீர்திருத்தங்களை பிரதமர் நரேந்திரமோடி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ஆசியபசிபிக் கூட்டமைப்பில் இந்தியா இணைந்தால், அது அந்தநாட்டுக்கு உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.  இந்த பொருளாதார கூட்டமைப்பில் இணைந்தால், ஆசியபசிபிக் பிராந்தியத்தில் இந்தியா தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply