ஆட்சி நடத்துவதில் காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் தோற்றுபோன கட்சிகள் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கேரளமாநில பா.ஜ.க தொண்டர்களுடன் காணொலிகாட்சி மூலம் உரையாடியவர், நாட்டில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு என இருவேறு ஆட்சிகள் நடைபெற்றன. ஆனால் இந்த இரு ஆட்சிகளும் தோல்வி அடைந்து விட்டன. அந்த இருகட்சிகளின் ஆட்சியிலும் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் இருந்தது, ஆனால் இப்போது நாட்டுமக்கள் அனைவருமே முக்கியமானவர்கள்தான்.

கேரள மாநிலத்தில் சபரிமலை கோவிலுக்கு கடும்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது, இதனை எதிர்த்துபோராடும் தொண்டர்கள் தற்கொலை முடிவை எடுக்கக்கூடாது என்றார்.

 

Leave a Reply