ஆட்டோ டிரைவர் வீட்டுக்கேசென்று ஆறுதல் தெரிவித்த பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், இன்று கமலாலயத்தில் "தூய்மையே உண்மையான சேவை" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தெருவை, கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்தார்.
 
இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு தமிழிசை சவுந்தர ராஜன் பேட்டி அளித்தபோது, ஆட்டோ டிரைவர் கதிர் என்பவர் குறுக்கே வந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வுகுறித்து கேள்வி எழுப்பினார். தமிழிசையின் பின்னால் நின்று கொண்டிருந்த நிர்வாகிகள், அந்த ஆட்டோ டிரைவரை பின்னால் தள்ளி சென்றுதாக்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது.
 

இந்நிலையில் நேற்று ஆட்டோ ஓட்டுநர் கதிர்வீட்டுக்கு நேராகசென்று தமிழிசை, அவரிடம் நலம் விசாரித்தார். இனிப்புவழங்கி அவரை ஆறுதல் படுத்தினார். தெருக் கூத்து நிகழ்ச்சியில் கேள்விகேட்ட ஆட்டோ டிரைவர் சகோதரர் கதிர் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவருடன் உரையாடினேன், என்று டுவிட்டரில் செய்தி வெளியிட்டார் தமிழிசை.

இந்தநிலையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று தூய்மையே உண்மையான சேவை நிகழ்ச்சிக்காக சாலையைபெருக்கி சுத்தம் செய்து குப்பைகளை அள்ளினார். இதுகுறித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் தமிழிசை சௌந்தராஜன்.

 

Leave a Reply