நாட்டில் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருந்தால் அதற்கு இந்த புள்ளி விவரங்கள்
தவறு என்பதும் பொருளாதாரம் வீழ்ச்சி என்றவுடன் டீ வித்த மோடிக்கு என்ன பொருளாதார அறிவு இருக்க முடியும்? என்று கேலி செய்வதும் மோடி எதிர்ப்பாளர்களின் வாடிக்கை.

இப்பொழுது ஆட்டோமொபைல் இன்டஸ்ட்ரீஸ்வீழ்ச்சி என்றவுடன் வரிந்து கட்டிக்கொண்டு
வசை பாடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆட் டோ மொபைல் இன்டஸ்ட்ரீஸ் வீழ்ச்சி அடை ந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது.ஆனால்அதற்கு பொருளாதார வீழ்ச்சியை முன் வை ப்பது தவறானது.

ஏனென்றால் இந்த பொருளாதார வீழ்ச்சி என் பதை கிளப்பி விட்டதே ஆட்டோ மொபைல்
இன்டஸ்ட்ரீஸ் தொழிலில் உள்ள பெரிய நிறு வனங்கள் தான் .அவர்கள் ஏன் பொருளாதார
வீழ்ச்சி என்று கிளப்பி விட வேண்டும் என்றுஉங்களுக்கு கேள்வி வரலாம். இப்படி அவர்
கள் கிளப்பி விட வில்லை என்றால் அவர்கள் உண்மையிலேயே பொருளாதார வீழ்ச்சி யை
சந்திப்பார்கள்.

அவர்களை தற்காத்து கொள்ளவே கார் உற்ப த்தி குறைந்தது. கார் விற்பனை அழிந்தது. லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை இழ ப்பு என்று அள்ளி விட்டு வருகிறார்கள். உண்
மையிலேயே இதற்கு என்ன காரணம் தெரியு மா? பி எஸ்-6 தான்.

அதென்னப்பா பிஎஸ்-6 என்று கேட்கிறீர்களா.அது தாங்க பாரத் ஸ்டே ஜ் -6 என்கிற விதிமு
றைகள்.அதாவது வாகனங்களினால் உண்டா கும் புகையினால் காற்றில் உண்டாகும் மாசுக்
களை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் வாகனங்கள் இப்படித்தான் உருவாக்க ப்பட்டு
வேண்டும் என்பதற்காக உருவான விதிகள் தான் இந்த பாரத் ஸ்டேஜ் என்கிற விதிகள்.

சரியான வார்த்தையில் கூற வேண்டும் எ ன்றால் சுற்று புற சூழலுக்கு கெடுதல் இல்லாத காற்றில் மாசு உண்டாக்காத வகையில் இஞ்சின்கள் தயாரிக்கப்பட்டு அதையே
வாகனங்களில் பொருத்த வேண்டும் என்பதேவிதியாகும்.இதுவும் நாம் ஆராய்ந்து உருவா க்க வில்லை. ஐரோப்பிய யூனியன் அமைப்பு உருவாக்கி கொடுத்த விதிமுறைகளை நாம்
செயல் படுத்துகிறோம்.

நாம் இப்பொழுது பயன்பாட்டில் வைத்து இரு க்கும் வாகனங்களில் இருப்பது பிஎஸ்-4 விதி
களை பின்பற்றி உருவான இஞ்சின்கள் தா ன்.கடந்த 2000 ம் ஆண்டில் இருந்து உருவான
இந்த விதிகளை கடை பிடிக்க நாம் எடுத்துக்கொண்ட கால அளவுகளை பார்த்தால் சுற்று
புற சூழல் பற்றிய நம்முடைய அக்கறையைஅறிந்து கொள்ளலாம்.

ஐரோப்பிய நாடுகள் எல்லாம் இரோ-6 விதி களை முன் வைத்து உருவான வாகனங்களை
2015 ம் ஆண்டிலேயே பயன்படுத்த ஆரம்பி த்து விட்டார்கள். ஆனால் நாம் இன்றும் பிஎஸ்-4 ஐ தாண்ட முடியாமல் இருந்து வருகிறோம்.இதனால் தான் இந்தியாவில் தயாரிக்க ப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் தரம் நிர்ணயிக்கும் நிறுவனமான `Bureau of Indian Standards’ (BIS), கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட து.

அதில், `காற்றுமாசைக் குறைப்பதற்கு பிஎஸ் -6 விதிகளை பின்பற்றி உருவாகும் இன்ஜின் களை உடைய வாகனங்கள் தான் இனி விற்ப னைக்கு வர வேண்டும் .இது 2020 ம் ஆண்டு
ஏப்ரலில் இருந்து கட்டாயம் என்று கறாராககூறியிருந்தது.

இதற்கு ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் அமைப்பான சியாம் அதாவது (சொசைட்டி ஆப்இந்தியன் ஆட்டோமொபைல் மேனுபேக்ச ரர்ஸ் ) அமைப்பு உச்சநீதிமன்றம் சென்று
முறையிட்டு பார்த்தும் பயனில்லாமல் போக வே 2020 ஏப்ரலுக்குள் அடுத்து வர இருக்கும்
வாகனங்களில் பிஎஸ்-6 விதிகளை பின் பற்றி உருவான இஞ்சின்கள் இருக்க வேண்டும்.

பிஎஸ்-3 யில் இருந்து பிஎஸ்-4 க்கு இஞ்சின்களை மாற்ற சியாம் அமைப்பு எடுத்துக் கொண்ட காலம் எவ்வளவு தெரியுமா? 7 ஆண்டுகள் ஆகும். இப்படிப் பட்ட சுயநலவாதிகளா ன ஆட்டோ மொபைல் உற்பத்தி யாளர்கள் 2 வருடங்களில் பிஎஸ்-6 விதிமுறைக்கு வந்து விடுவார்கள் என்பது கேலிக் கூத்தானது.

பிஎஸ்-6 விதிகளின் படி, இன்ஜின் வெளியி டும் புகையிலிருந்து சல்ஃபர் எனும் நச்சு ப்பொருளை 80 சதவிகிதம் குறைவாக இரு க்க வேண்டும்; 70 சதவிகிதம் நைட்ரஜன் ஆக்ஸைடு எனும் நச்சுக்காற்றைக் குறைக்க வேண்டும். இதற்கு இன்ஜினில் மாற்றங்கள் செய்தால் மட்டும் போதாது.

டீசல் பர்டிகுலேட் பில்டர் மற்றும் செலக்டிவ்கேட்டலைடிக் ரிடக்சன் என்கிற இரண்டு புதிய
புதிய கருவிகளை இணைக்க வேண்டும். அத ற்கு பிறகும் பர்டிகுலேட் மேட்டர் என்கிற மாசு
அதிகமாகும்.அதை 10 பிபிஎம் அளவிற்கு குறைக்க வேண்டும்.இதற்காக டீசல் ஆக்சி
டேசன் கேட்டலைஸ்டு என்னும் கருவியைஇணைக்க வேண்டும்.படிக்கிற நமக்கு தலை
சுத்துகிறது என்றால் ஆட்டோ மொபைல் உன்பத்தியாளர்களுக்கு எப்படி இருக்கும்?

அவர்களின் தலை மட்டுமல்ல அவர்களின் தொழிற்சாலைகளும் சேர்ந்தே சுற்ற ஆரம்பி த்து விட்டது. ரூல்ஸ் எல்லாம் போடுபவர்களுக்கு ஈஸியாக இருக்கும் ஆனால் அதை கடை
பிடிப்பவர் களுக்கு உள்ள கஷ்டம் அனுபவித்த வர்களுக்கு தானே தெரியும்.

முதலில் பிஎஸ்-6 விதிகளின் படி இஞ்சின் களை உருவாக்க வேண்டும் என்றால் அனை த்து வாகன உற்பத்தி தொழிற் சாலைகளும் தங்களுடைய தொழிற் சாலைகளை மாற்றி அமைக்க வேண்டும்.இதற்கே சில கோடிகள் செலவிட வேண்டும்.

அடுத்து பிஎஸ்-6 விதிகளுக்கான தொழி ல்நுட்பங்களை ஒருங்கிணைத்து, அந்தத் தொழில்நுட்பங்களைத் தயாரிப்புக்கு கொ ண்டு வரவேண்டும் என்றால் அதற்காக ஊழி
யர்களுக்கு தனியாக ட்ரெயினிங் கொடுக்க வேண்டும்.

இப்படி ட்ரெயினிங்கான ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்து ஓவர் டைம் அளி த்து வேலை வாங்கினால் தான் 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து பிஎஸ்-6 வாகனங்க ளை ஓரளவு தயாரிக்க முடியும்.அப்புறம் தயாரித்த வாகனங்களை டெஸ்ட் செய்ய வேண்டும். இதற்காக தனியாக ஆட்களை வேலைக்கு எடுக்க வேண்டும்.

புதிதாக பிஎஸ்-6 விதிகளை பின்பற்றி இஞ்சின்களை உருவாக்க வேண்டும் என்றால்
ஏற்படும் செலவை விட இப்பொழுது இருக்கு ம் பிஎஸ்-4விதிகளை பின்பற்றி உருவான
இஞ்சின்களை கழற்றி பிரித்து மேய்ந்து ஆ ல்டர் செய்து பிஎஸ்-6 இஞ்சின்களாக மாற்ற
வேண்டும் என்றாலும் பல கோடிகள் காலியாகி விடும்.

அதுமட்டுமின்றி நேரம் அதிகமாகும். புதிய பிஎஸ்-6 இஞ்சின்களை கொண்ட ஒரு காரை
தயாரிக்க ஒரு நாள் ஆகிறது என்றால் அந்த ஒரே நாளில் இப்பொழுது உள்ள பிஎஸ்-4
இஞ்சின்களை உடைய 2 கார்களை தயாரித்து விட முடியும்.

இப்படி ஆயிரெத்தெட்டு சிக்கல்கள் இருக்கும் பொழுது எந்த ஆட்டோ மொபைல் நிறுவனம்
பிஎஸ்-6 விதிகளை பின்பற்றி உடனடியாக வாகனங்களை தயாரிக்க முற்படும்? அதனால்
தான் இதில் அரசாங்கம் ஏதாவது மாற்றம் அறிவிக்கும் என்று நினைத்து உற்பத்தியை குறைத்து கொண்டார்கள்.

ஆட்டோமொபைல் இன்டஸ்ட்ரீஸ் புதிய பிஎ ஸ்-6 இஞ்சின்களுக்காக உற்பத்தி நிறுத்தம்
இதனால் ஊழியர்களின் வேலை நாட்கள் குறைப்பு என்றால் யாராவது காது கொடுத்து
கேட்கிறீர்களா? மாட்டீர்கள்.அதனால் தான் ஆட்டோமொபைல் இன்டஸ்ட்ரீஸ் வீழ்ச்சிக்கு
பொருளாதார வீழ்ச்சியே காரணம் என்று எடுத்து வைக்க ப்படுகிறது.

இதற்காக பயந்தாவது மத்திய அரசு பிஎஸ்-6 வாகனங்களை உருவாக்குவதை தள்ளி போட
வைக்கும் என்பது இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் நம்பிக்கை.மக்களுக்கு
சுத்தமான காற்றை அளித்து அவர்களுக்குநீண்ட ஆயுளை அளிக்க வேண்டும் என்று
மத்திய அரசு நினைக்கிறது.

ஆனால் கோடீஸ்வர முதலாளிகள் அரசாங்கம் நினைப்பதற்காக தங்களுடைய பணம் பாழா கி விடுமே என்கிற பயத்தில் ஆட்களை வேலை குறைப்பு செய்கிறார்கள். ஆனால்
அரசாங்கத்தின் கட்டளைப்படி இப்பொழுது ஆட்டோ மொபைல் தயாரிப்பாளர்கள் பிஎஸ்-6
விதிகளின் படி வாகனங்களை தயாரிக்க முன் வந்தால் ஆட்டோமொபைல் துறையில் நிறை
ய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

சரிப்பா பிஎஸ்-6 பிரச்சனை க்காக உற்பத்தி யை குறைத்து விட்டார்கள் என்பது சரியெ ன்று வைத்துக் கொண்டாலும் மக்கள் ஏன் கார்களை வாங்க முன் வரவில்லை என்று
நீங்கள் கேட்கலாம். அப்பொழுது அவர்களிடம் பணம் இல்லை என்பது உண்மை தானே என்றும் நீங்கள் நினைக்கலாம்.

நம்முடைய மக்கள் மிகத்தெளிவானவர்கள் ஆடித்தள்ளுபடியில் தான் ஜவுளி க்கடையில்
முட்டி மோதுவார்கள்.அதே மாதிரி இப்பொழு து இந்த பிஎஸ்-6 பிரச்சனையில் கண்டிப்பாக
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர்கள் ஒரு முடிவு எடு த்து இப்பொழுது உள்ள பிஎஸ்-4 வாகன ங்களை அடி மாட்டு விலைக்கு தள்ளி விடு வார்கள் அப்பொழுது அள்ளிக்கொள்ளலாம் என்று மக்கள் காத்து இருக்கிறார்கள்.

இதனால் தான் ஆட்டோ மொபைல் துறையி ல் உற்பத்தி வீழ்ச்சி அடைந்ததற்கும் வாகன
விற்பனை சரிந்ததற்கும் ஆட்டோ மொபைல் துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்ததற் கும் உண்மையான காரணம்..ஆனால் அதைவிட்டு விட்டு பொருளாதார வீழ்ச்சியினால்
தான் கார் உற்பத்தி விற்பனை குறைந்தது என்பது உண்மையல்ல..

Comments are closed.