ஆபாச இணையதளங்களை தடைசெய்ய வேண்டும் என்று மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் பூபேந்திரசிங் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. பூபேந்திர சிங் உள்துறை அமைச்சகத்தை கவனித்துவருகிறார்.

இந்நிலையில், ஆபாச இணைய தளங்களை தடைசெய்வது தொடர்பாக பூபேந்திர சிங், போபாலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நாடுமுமுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல்பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

ஆபாச இணைய தளங்களை பார்ப்பதால் தான் இம்மாதிரியான குற்றங்கள் அதிகரிப்பதாக நான் கருதுகிறேன். எனவே, ஆபாச இணையதளங்களை தடை செய்யவேண்டும். மத்தியப் பிரதேசத்தில் ஆபாச இணைய தளங்களுக்குதடை விதிப்பது குறித்து சிந்தித்து வருகிறோம். இதுதொடர்பாக, மத்திய அரசிடம் ஆலோசிக்கப்படும் என்றார் பூபேந்திர சிங்.

Leave a Reply