ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் இயக்கத்தினர், பாகிஸ்தான் தீவிரவாதிகள் அதிகரித்துவருவது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப்கானி கவலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் இயக்கத்தினர் அதிகரித்துள்ள தாகவும் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவி வருவதாகவும் தெரிவித்தார். கஜினிநகரை முற்றுகையிட்டுள்ள தாலிபான் படையினருக்கு உதவியாக வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள தீவிரவாதிகள் உள்ளதையும் மோடியிடம் அஷ்ரப்கானி தெரிவித்தார். ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வதற்காகக் காபூலுக்கு வந்த இந்தியரான நசீதுல்ஹம்சாபர் என்பவரை ஆப்கன் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளதாகத் தேசியப்புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply