ஆப்பிள் நிறுவனத்திற்கு வரவேற்பு அளிக்கதயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார். இந்தியாவில் உற்பத்தி நிறுவனத்தை அமைக்க ஆப்பிள் நிறுவனம் பரிசீலித்துவருகிறது.

இது தொடர்பாக செய்திநிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து முறையான முன்மொழிவு வரும் என்று காத்திரு ப்பதாக தெரிவித்தார். உலகின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் ஆப்பிள் நிறுவனத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என்று கூறியவர், இதில் ஏதேனும் கடினமான சூழல் அந்தநிறுவனத்திற்கு ஏற்பட்டால் அதை களைவோம் என்றும் உறுதிகூறியுள்ளார்.

Leave a Reply