எங்க மீனவனை காப்பாத்த வக்கில்லை, எதுக்கு (புடுங்கவா) இவ்வளவு பெரிய கப்பல் படை என்று ஒரு மீம் பக்கத்தில் பதிவை பார்த்தேன்..

நான் அடைந்த மன வேதனையை சொல்லி மாளாது  ..     

நான் பள்ளி படிக்கும் காலத்திலெல்லாம் தேச பக்தி, நம் ராணுவத்தை போற்றுதல், நம் முன்னோர்கள் இந்த நாட்டிற்கு செய்த தியாகம் எல்லாம் சொல்லி கொடுத்தார்கள்..

நான் சிறுபிள்ளையாக இருந்த பொழுது பள்ளியில்  ஒருமுறை கொடுத்த தேசிய கோடியை (சட்டையில் குத்திக்கொண்டது) வீட்டிற்கு வந்ததும் pin ஐ கழட்டி கீழே போட்டவுடன் என் தந்தை என்னை திட்டி , அது தேசிய கோடி… இப்படி அவமரியாதை செய்ய கூடாது என்று பத்திரமாக எடுத்து ஒரு இடத்தில வைத்தார்..

இப்படி வீட்டில் இருக்கும் பெரியவர்கள், பள்ளி ஆசிரியர்கள் எல்லாம் தேசப்பற்றை சொல்லி கொடுத்தார்கள் என் தலைமுறைக்கு.. ஆனால் இன்றய தலைமுறைக்கு சொல்லிக்கொடுப்பவரெல்லாம் எங்கே போனார்கள்? எதற்க்கெடுத்தாலும் சர்வ சாதாரணமாக பொதுவெளியில் கெட்ட வார்த்தை பேசுவது (அது ஏதோ கெத்து என்று நினைத்து பெருமைப் படுகிறார்கள்) , தேசத்தைத் திட்டுவது, பிரிவினை பேசுவது, நாட்டுத் தலைவர்களைக் கெட்ட வார்த்தையில் திட்டுவது, நாட்டைக் கேவலமாக பேசுவது என்று போய்க்கொண்டிருக்கிறார்கள்.. இவர்கள் தாய் தந்தை எல்லாம் இவர்களைப் பார்த்துப் பெருமைப் படுகிறார்களா?

இப்படி நாட்டை துவேசிக்கும் நீங்களெல்லாம் நாட்டிற்கு ஏதாவது நல்லது செய்திருக்கிறீர்களா?

இப்படி இந்த நாடும் (முக்கியமாக தமிழ்நாடு) , நாட்டு மக்களின் எண்ணங்களும் சீரழிய யார் காரணம்?

இதோ உங்கள் கேள்விக்கு பதில்.. புடுங்கவா இவ்வளவு பெரிய கடற்படை? ஆமாம்.. புடுங்கதான்.. கடல் வழி அந்நிய ஆகிரமிப்பை வேரோடு புடுங்கத்தான்… இன்று இவ்வளவு வலிமையான கடற்படையாக நாம் இருப்பதால்தான் சீன இன்று இந்திய பெருங்கடலை முழுங்கி ஏப்பம் விடாமல் இருக்கிறது… இல்லையென்றால் பாகிஸ்தானும் சீனாவும் சென்னை உட்பட எல்லா கடற்கரை நகரங்களில் இந்நேரம் பல குண்டுகளை வீசி இருக்கும்.. நீங்கள் வீடு வாசல் வாழ்வாதாரம் இல்லாமல் சொத்துக்கு பிச்சை எடுத்துக்கொண்டிருப்பீர்கள்..

அப்பொழுது ஏன் மீனவர்களை காப்பாற்றவில்லை? உங்களிடம் சரியான கணக்கு இருக்கிறதா? எத்தனை படகுகள் கடலுக்குள் சென்றது என்று? கேட்டால் மீனவ குடும்பங்கள் கதறுகிறதாம் டிவி சேனல்கள் முன்னால்.. டிவி சேனல்கள் லட்சணம் தெரியாத முட்டாள்களா நீங்கள்? ஒவ்வொரு டிவி சேனல்களுக்குப் பின்னும் ஒரு அரசியல் கட்சி இருக்கிறது..நேற்றுக்கூட இந்த சேகர் ரெட்டியின் டைரியில் பல பிரபல பத்திரிகையாளர்கள் பெயர்கள் வரவில்லையா? உங்கள் உணர்ச்சியை தூண்டுவது அவர்களுக்கு மிகவும் சுலபம்.. நீங்கள் உணர்ச்சிவசப்படும் முட்டாள்கள் என்பதை அவர்கள் நன்கறிந்திருக்கிறார்கள்.. வேறு யாரு? அரசாங்க பெயரைக் கெடுக்கத் துடிக்கும் சில எதிர்க்கட்சிகள், வெளிநாட்டு பணம் தடைபட்ட கோவத்தில் இருக்கும் கிறித்துவ மிஷனரிகள் மற்றும் தேச  பிரிவினை கும்பல்கள்.. நீங்களும் ஆட்டு மந்தையை போல பின்னாடியே செல்கிறீர்கள் அவர்களின் திட்டப்படி..

அரசாங்கம் பல கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பி பல மீனவர்களை காப்பாற்றிதான் இருக்கிறது.. அவர்களும் மனிதர்கள்தான்.. மாயாவிகள் இல்லை.. இந்த சமயத்தில் நம்மால் முடிந்த அளவு இந்த கடற்படை வீரர்களுக்கு நாம் ஊக்கம் அளிக்க வேண்டுமே தவிர, அவர்களை மட்டம் தட்டினால் அவர்கள் பணியில் இன்னும் சோர்வுதான் ஏற்படும்..

மீனவர்களை GPS பயன்படுத்த சொல்லி அரசாங்கம் பல முறை சொல்லிவிட்டது.. ஆனால் அவர்கள் அதை உபயோகப் படுத்த மறுக்கிறார்கள்.. ஏனென்றால் இவர்கள் எல்லை தாண்டிச் செல்வது தெரிந்துவிடும் என்ற பயம்.. bottom trawler , இரட்டைவடை வலை போன்ற வலைகள் கூடாது என்று தடை செய்தாலும் அதை தெரிந்தே பேராசையில் பயன் படுத்துகிறார்கள்.. அப்படிப் பயன் படுத்தி இந்திய பகுதியில் இருக்கும் கடலை மலடாக்கியதும்மில்லாமல் இலங்கைப் பகுதியிலும் அதைப் பயன்படுத்துகிறார்கள்.. இங்கே இந்திய தமிழக மீனவர்களை எதிர்த்து இலங்கை அரசிடம் புகார் கொடுப்பதே இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள்தான்.. தெரியுமா இதெல்லாம் உங்களுக்கு? வானிலை சரியில்லை, கடலுக்குள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை கொடுத்தும் கடலுக்குள் போவோம் என்கிறார்கள்..

நாங்கள் எந்த உத்தரவையும் மதிக்க மாட்டோம், எந்த சட்டத்தையும் பின் பற்ற மாட்டோம், எந்த எச்சரிக்கையையும் கண்டுகொள்ள மாட்டோம்.. ஆனால் எங்களுக்கு பிரச்சனை என்று வந்தால் எங்கிருந்தாவது பறந்து வந்து எங்களை காப்பாற்றிவிட வேண்டும்… இல்லையென்றால் இந்த நாடும், ராணுவமும் என்ன புடுங்குகிறதா என்று கேவலமாக பேசுவோம் என்றால், என்ன நியாயம் இது?

துக்ளக் ஆசிரியர் திரு சோ அவர்களின் இரு நாடகங்களின் தலைப்புதான் ஞாபகம் வருகிறது.. அது யாருக்கும் வெட்கமில்லை மற்றும் இறைவன் இறந்துவிட்டானா என்கிற நாடகங்கள்தான் அவை ..

Leave a Reply