”தேர்தலில், மிகபெரிய வெற்றிபெற்று, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கைகளில் ஒப்படைப்பேன்,” என, ஆயிரம் விளக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்தார்.

குஷ்பு அளித்தபேட்டி: பிரதமர் மோடி, நாட்டிற்கு உழைப்பதை பார்த்து, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், அங்கீகாரம்கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு, பா.ஜ.,வில் இணைந்தேன். இவ்வளவு சீக்கிரத்தில், எனக்கு தேர்தலில்வாய்ப்பு வழங்கப்படும் என, எதிர்பார்க்கவில்லை.

இதற்காக, கட்சி தலைமைக்கு நன்றி. ஆயிரம்விளக்கு தொகுதியில், நிச்சயமாக மிகபெரிய வெற்றிபெறுவேன். அதை, மோடி, அமித்ஷா, பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் கைகளில் ஒப்படைப்பேன்.இங்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும், மேற்குவங்கம், அசாம் மாநிலங்களுக்கு சென்று, பா.ஜ.,வுக்கு ஆதரவாக பிரசாரம்செய்வேன்.

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ‘வாஷிங் மிஷன்’ வழங்க இருப்பதாக அறிவித்ததை வரவேற்கிறேன். வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு, நல்லது செய்வதில், எந்த தவறும் இல்லை. அவர்களுக்காக சிறப்புதிட்டங்களை, அரசு செயல்படுத்துவதுதான் முக்கியம். இவ்வாறு, அவர் கூறினார்.

Comments are closed.