ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு செய்யப் பட்டது நாட்டில் சரித்திர திருப்பு முனையை ஏற்படுத்தி யுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன்  தெரிவித்தார்.


உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஓராண்டு நிறைவுதினம், கருப்புப் பண ஒழிப்பு வெற்றி நாளாக பாஜக சார்பில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்றகையெழுத்து இயக்கத்தை மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட பணமதிப் பிழப்பு நடவடிக்கையால் ரிசர்வ்வங்கிக்கு ரூ.15.26 லட்சம் கோடி திரும்பிவந்தது. வங்கிகளில் 17.73 லட்சம் போலி கணக்குகள் கண்டறியப்பட்டன. 23.22 லட்சம் வங்கிக் கணக்குகள் மூலம் ரூ. 3.68 லட்சம் கோடி பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. நாடுமுழுவதும் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனைகள் மூலம் ரூ.29 ஆயிரம்கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடந்த செப்டம்பர் மாதம்வரை ரூ.12 லட்சம் கோடி பதுக்கல்பணம் கண்டறிப் பட்டுள்ளது.


மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், 2.24 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டறியப் பட்டன. 100 -க்கும் மேற்பட்ட வங்கிக்கணக்குகள் வைத்திருந்த போலி நிறுவனங்கள் பிடிபட்டன. இதில் ஒரு நிறுவனம் மட்டும் 2,134 வங்கிக் கணக்குகள் வைத்திருந்தது கண்டறியப் பட்டது.


வருமானவரி செலுத்துவோர் எண்ணிக்கை 66.53 லட்சத்தில் இருந்து 85 லட்சமாக உயர்ந் துள்ளது. நாட்டில் திருப்புமுனையை ஏற்படுத்தும் மாற்றத்தை யாருமே பாதிக்கப் படாமல் கொண்டுவர முடியாது. இதனால் சிலர் பாதிக்கப் படலாம். ஆனால் அதற்கான விளைவுகள் நாட்டை பெரும் முன்னேற்றத்துக்கு கொண்டு செல்லும். எதிர்க்கட்சிகள் இதை வீணாக அரசியலாக்கு கின்றனர் என்றார் அவர்

Leave a Reply