ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நாட்டுமக்களுக்கு ராம்நாத் கோவிந்த்  உரை நிகழ்த்தினார். 

அப்போது அவர் பேசியாதாவது:

ஜனநாயகத்தின் தூண்களாக நாட்டுமக்கள் திகழ்கிறார்கள்/ நாட்டை காக்கும் முப்படை வீரர்களுக்கும், வளப்படுத்தும் விவசாயி களுக்கும் நன்றிதெரிவித்து கொள்கிறேன்.  நாட்டின் வளர்ச்சிக்கு தூணாக இருக்கும் இளைஞர்களுக்கு  குடியரசு தினவாழ்த்துக்கள். 

 

நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட வர்களை நினைவுகூறும் நேரம் இது. எத்தனை தடைகள் வந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நாட்டின் வளர்ச் சிக்காக பாடுபடவேண்டும்.  நாட்டுமக்கள் அனைவரும் தங்கள் துறைகளில் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுவருவது பெருமை அளிக்கிறது.

பெண் குழந்தைகளுக்கு ஆண்களுக்கு நிகராக கல்வி உட்பட அனைத்திலும் சமஉரிமை அளிக்கவேண்டும். பெண் குழந்தைகளுக்காக குரல்கொடுத்தால் தான் சமுதாயம் சமநிலையை அடையும். ஆரோக்கியமான குழந்தைகள்தான் வலிமையான இந்தியாவின் எதிர் காலம் என்பதை உணரவேண்டும். குழந்தைகளுக்கு கலவிபயிலும் வசதியை ஏற்படுத்தி தருவதை உறுதிப்படுத்த வேண்டும்.

Leave a Reply