ஆர்எஸ்எஸ். அமைதியை பரப்பும் இயக்கமேதவிர வன்முறையை கட்டவிழ்க்கும் இயக்கம் அல்ல என மத்திய அமைச்சர் சத்யபால் சிங் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒடுக்கு முறைக்கு எதிராக 200 ஆண்டுகளுக்கு முன்பு பீமா கோரேகான் என்ற இடத்தில் மிகப்பெரிய யுத்தம் நடந்தது.இதில் பேஷ்வா படையினர் 25,000 பேரும், மகர் படையினர் 500 பேரும் கொல்லப்பட்டனர். இதன் நினைவாக பீமா கோரேகானில் வெற்றி தூண் நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் ஜனவரி 1-ந்தேதியன்று இந்த நினைவு தூணுக்கு தலித்துகள் ஒன்றுதிரண்டு வீரவணக்கம் செலுத்துவது வழக்கம்.

அதன்படி கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற பேரணியில் லட்சக்கணக்கான இந்துக்கள் கலந்து கொண்டனர்.  மோதல் வெடித்தது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அரசு பஸ்கள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. புனேயில் தலித்சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட இந்தச்சம்பவத்திற்கு ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளே காரணம் என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியிருந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். மீதான இந்தப்புகாரை மத்திய அமைச்சர் சத்யபால் சிங் முற்றாக மறுத்துள்ளார். 

இது குறித்துப் பேசியவர், "நாட்டில் அமைதியை நிலநாட்டும் தேசிய இயக்கமான ஆர்எஸ்எஸ். வன்முறையை பரப்பவில்லை. இந்தவன்முறை தொடர்பாக நீதி விசாரணைக்கு மகாராஷ்டிர முதல் அமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் உத்தரவிட்டுள்ளார். வன்முறைக்கு காரணம் யார்? என்ற உண்மை இந்தவிசாரணையில் தெரிந்து விடும். இவ்வாறு சத்யபால்சிங் தெரிவித்தார்.

Leave a Reply